எங்களை அவமானப்படுத்தி விட்டீர்கள்: கேகேஆர் அணியுடன் சண்டையிட்ட மனோஜ் திவாரி

2012 ஐபிஎல் இறுதிச்சுற்றை கொல்கத்தா ரசிகர்களால் மட்டுமல்லாமல் சென்னை ரசிகர்களாலும் மறக்க முடியாது.
எங்களை அவமானப்படுத்தி விட்டீர்கள்: கேகேஆர் அணியுடன் சண்டையிட்ட மனோஜ் திவாரி

2012 ஐபிஎல் இறுதிச்சுற்றை கொல்கத்தா ரசிகர்களால் மட்டுமல்லாமல் சென்னை ரசிகர்களாலும் மறக்க முடியாது.

2010, 2011 ஆண்டுகளில் அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பைகளைக் கைப்பற்றிய சிஎஸ்கே அணி, ஹாட்ரிக் பட்டத்தைப் பெறுவதற்காகக் காத்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் முதலில் விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. இதனால் வெற்றி நிச்சயம் என சென்னை ரசிகர்கள் குஷியாக இருந்தார்கள். ஆனால், 48 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த பிஸ்லாவும் 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த காலிஸூம் ஆட்டத்தின் போக்கை மாற்றி கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தந்தார்கள். 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது கொல்கத்தா அணி.

மே 27 அன்று ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியதால் நேற்று கேகேஆர் ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி ஒரு பதிவு எழுதப்பட்டது. இதுபற்றிய உங்களுடைய நினைவுகள் என்ன என்று ரசிகர்கள் கேள்வி கேட்கப்பட்டது. இந்த ட்வீட்டில் கம்பீர், பிஸ்லா, சுனில் நரைன், மெக்குல்லம் ஆகியோரை டேக் செய்திருந்தது. ஆனால் தன்னையும் ஷகிப் அல் ஹசனையும் ஏன் அந்த ட்வீட்டுடன் இணைத்து டேக் செய்யவில்லை என்று கேகேஆர் அணியுடன் சண்டையிட்டார் அப்போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த மனோஜ் திவாரி. அவர் கூறியதாவது:

இதுபற்றி நிறைய நினைவுகள், உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைய உள்ளன. ஆனால் இந்த ட்வீட்டில் என்னையும் ஷகிப் அல் ஹசனையும் டேக் செய்ய மறந்தது அவமானப்படுத்துகிறது. வருத்தங்கள் என ட்வீட் செய்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்த கேகேஆர் அணி, வாய்ப்பே இல்லை மனோஜ். உங்களைப் போன்ற வீரரை டேக் செய்ய நிச்சயம் மறக்க மாட்டோம். இதற்கான புகைப்படத்தில் உங்களை டேக் செய்திருந்தோம். 2012 வெற்றியில் நீங்களும் ஒரு ஹீரோ தான் எனக் கூறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com