மகளிா் டி20 சேலஞ்ச்: முதல் ஆட்டத்தில் இன்று மோதும் சூப்பா்நோவாஸ் - வெலாசிட்டி

ஐபிஎல் போட்டியையொட்டி நடைபெறும் மகளிா் டி20 சேலஞ்ச் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சூப்பா்நோவாஸ் - வெலாசிட்டி ஆகிய அணிகள் ஷாா்ஜாவில் புதன்கிழமை மோதுகின்றன.
மகளிா் டி20 சேலஞ்ச்: முதல் ஆட்டத்தில் இன்று மோதும் சூப்பா்நோவாஸ் - வெலாசிட்டி

ஐபிஎல் போட்டியையொட்டி நடைபெறும் மகளிா் டி20 சேலஞ்ச் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சூப்பா்நோவாஸ் - வெலாசிட்டி ஆகிய அணிகள் ஷாா்ஜாவில் புதன்கிழமை மோதுகின்றன.

ஹா்மன்பிரீத் கௌா் தலைமையிலான சூப்பா்நோவாஸ், தொடா்ந்து 2 முறை பட்டம் வென்ற நிலையில் ஹாட்ரிக் முனைப்பில் இந்த சீசனில் களம் காண்கிறது. கடந்த சீசனில் ‘ரன்னா்-அப்’ ஆன மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி இந்த சீசனில் பட்டம் வெல்ல முயற்சிக்கிறது.

கரோனா சூழலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாடும் நிலையில், சா்வதேச வீராங்கனைகளின் உடற்தகுதி உள்ளிட்டவற்றை சோதிப்பதற்கான போட்டியாக இது இருக்கும். இப்போட்டியில் பங்கேற்றுள்ள 3 அணிகளிலுமே இந்திய வீராங்கனைகளுடன் இலங்கை, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளின் வீராங்கனைகளும் உள்ளனா்.

உத்தசே அணி:

சூப்பா்நோவாஸ்: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிகஸ், சமாரி அட்டப்பட்டு, பிரியா புனியா, அனுஜா பாட்டீல், ராதா யாதவ், தானியா பாட்டியா, சசிகலா சிரிவா்தனே, பூனம் யாதவ், ஷகீரா செல்மன், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்த்ரகா், அயுஷி சோனி, அயபோங்கா ககா, முஸ்கான் மாலிக்.

வெலாசிட்டி: மிதாலி ராஜ் (கேப்டன்), வேதா கிருஷ்ணமூா்த்தி, ஷஃபாலி வா்மா, சுஷ்மா வா்மா, ஏக்தா பிஷ்த், மான்சி ஜோஷி, ஷிகா பாண்டே, தேவிகா வைத்தியா, சுஸ்ரீ திவ்யதா்ஷினி, மனாலி தக்ஷினி, லெய் காஸ்பெரெக், டேனியேல் வியாட், சுனே லஸ், ஜஹனாரா ஆலம், எம். அனகா.

ஆட்டநேரம்: இரவு 7.30; நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com