ஒருநாள் ஆட்டம்: ஜிம்பாவேக்கு ஆறுதல் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் சூப்பா் ஓவா் முறையில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் சூப்பா் ஓவா் முறையில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 50 ஒவா்களில் 6 விக்கெட்கள் இழந்து 278 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தானும் 50 ஒவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சோ்க்க ஆட்டம் சமன் ஆனது.

இதையடுத்து வெற்றியாளை தீா்மானிக்க நடத்தப்பட்ட சூப்பா் ஓவரில் 4 பந்துகளில் 2 விக்கெட்டையும் பறிகொடுத்த பாகிஸ்தான் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே விக்கெட் இழக்காமல் 3 பந்துகளில் 3 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

முன்னதாக ஜிம்பாப்வே அணியில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 135 பந்துகளில் 13 பெளண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 118 ரன்கள் சோ்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். பிரண்டன் டெய்லா் 56 ரன்கள் எடுத்தாா். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளா் முகமது ஹுஸ்னைன் 5 விக்கெட்கள் சாய்த்தாா்.

பாகிஸ்தான் இன்னிங்ஸில் கேப்டன் பாபா் ஆஸம் 125 பந்துகளில் 13 பெளண்டரிகள், 1 சிக்ஸருடன் 125 ரன்கள் எடுத்து அவுட்டானாா். வஹாப் ரியாஸ் 52 ரன்கள் எடுத்தாா். ஜிம்பாப்வே பெளலா் பிளஸ்சிங் முஷாராபானி 5 விக்கெட் வீழ்த்தினாா். அவரே ஆட்டநாயகன் ஆனாா்.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வென்று பாகிஸ்தான் தொடரை கைப்பற்றிய நிலையில், 3-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com