பாரீஸ் மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேன்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜெண்டீனா வீரர் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேன் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 
பாரீஸ் மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேன்


பாரீஸ்: பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜெண்டீனா வீரர் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேன் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 
போட்டித் தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருக்கும் அவர் 2-ஆவது சுற்றில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் காஸ்கட்டை 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 3-ஆவது சுற்றில் அவர் ஸ்பெயினின் அலெக்ஸôண்ட்ரோ டேவிடோவிச் ஃபொகினோவை எதிர்கொள்கிறார். 
முன்னதாக அலெக்ஸôண்ட்ரோ 2-ஆவது சுற்றில் பிரான்ஸின் பெஞ்சமின் போன்ஷியை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். 
இதர இரண்டாவது சுற்று ஆட்டங்களில் போட்டித் தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருக்கும் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி அமெரிக்காவின் மார்கஸ் கிரோனிடம் 6-7(3/7), 7-6(7/0), 5-7 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். போட்டித் தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் எதிர்கொண்ட தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் பாதியில் விலகியதால், மெத்வதேவ் வென்றதாக அறிவிக்கப்பட்டார். 
பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோ 6-3, 6-7(5/7), 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை வெற்றி கொண்டார். போட்டித் தரவரிசையில் 10-ஆம் இடத்தில் இருக்கும் கனடாவின் மிலோஸ் ரயோனிச் பிரான்ஸின் பியரி ஹியூஸ் ஹெர்பட்டை 6-4, 6-4 செட் கணக்கில் தோற்கடித்தார். 
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த கிரீஸ் வீரர் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ்  6-7(4/7), 7-6(8/6), 6-7(3/7) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் யுகோ ஹம்பர்டிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் பாப்லோ கரினோ பஸ்டா ஜெர்மனியின் ஜான் லென்னர்ட் ஸ்ட்ரஃப்பை 7-6(7/3), 6-2 செட் கணக்கில் வெற்றி கண்டார். 2-ஆவது சுற்றில் பிரான்ஸின் கோரென்டின் மௌடெட் வெளியேறியதால், குரோஷியாவின் மரின் சிலிச் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 
அமெரிக்காவின் டாமி பவுல் 3-6, 6-3, 6-3 செட் கணக்கில் பிரான்ஸின் கில்லஸ் சைமனை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 8-ஆம் இடத்தில் இருக்கும் பெல்ஜிய வீரர் டேவிட் கோஃபின் 4-6, 6-7(6/8) செட் கணக்கில் ஸ்லோவாக்கியாவின் நோபர்ட் கோம்பஸிடம் வீழ்ந்தார். செர்பியாவின் மியோமிர் மில்மேன் 6-4, 6-2 செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com