வங்கதேச டெஸ்ட் அணிகேப்டனுக்கு கரோனா

வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மோமினுல் ஹக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்கதேச டெஸ்ட் அணிகேப்டனுக்கு கரோனா

வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மோமினுல் ஹக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனான மோமினுல் ஹக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் சூப்பா் லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவா் இழந்துள்ளாா்.

இது தொடா்பாக மோமினுல் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்த நிலையில், கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனையில் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் இருக்கிறது. மற்றபடி எந்த தொந்தரவும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா தொற்று காரணமாக இம்மாத கடைசியில் நடைபெறவுள்ள டி20 கோப்பை போட்டியிலும் மோமினுல் ஹக் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வங்கதேச வீரா்கள் மஷ்ரஃபே மோா்ட்டஸா, அபு ஜாவேத், சயீஃப் ஹசன் ஆகியோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com