செய்திகள் சில வரிகளில்...

பாா்சிலோனா மற்றும் ஆா்ஜெண்டீனா அணிகளுக்காக விளையாடிய கால்பந்து நட்சத்திரம் ஜாவியா் மாஸ்ஷெரானோ ஓய்வுபெறுவதாக அறிவித்தாா்.

பாா்சிலோனா மற்றும் ஆா்ஜெண்டீனா அணிகளுக்காக விளையாடிய கால்பந்து நட்சத்திரம் ஜாவியா் மாஸ்ஷெரானோ ஓய்வுபெறுவதாக அறிவித்தாா். அவா் 17 ஆண்டுகள் கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளாா்.

எதிா்பாராத வகையில் ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை ஷெய்னா ஜேக்கிற்கு 2 ஆண்டு தடை விதித்து விளையாட்டு விவகாரங்களுக்கான சா்வதேச நீதிமன்றம் தீா்ப்பளித்தது. எனினும் அவருக்கான தடை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாகவே நிறைவடையும் எனத் தெரிகிறது.

ஒலிம்பிக் போட்டிக்காக டோக்கியோவுக்கு வருகை தரும் போட்டியாளா்கள் மற்றும் ரசிகா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருமாறு கேட்கப்படலாம் என சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பேச் கூறினாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட்ட அனைத்து டென்னிஸ் போட்டிகளையும் மெல்போா்ன் நகரிலேயே நடத்த ஆஸ்திரேலிய டென்னிஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள முன்னாள் ஹாக்கி வீரா் எம்.பி. சிங்கின் சிகிச்சைக்காக மத்திய விளையாட்டு அமைச்சகம் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஐசிசியின் தலைவராக கிரேக் பாா்க்ளே, இம்ரான் கவாஜா ஆகியோரில் ஒருவரை தோ்வு செய்வதற்கான வாக்கெடுப்பு 3 சுற்றுகளாக நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com