இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்: ஸ்மித், வாா்னா் சவாலை பௌலா்கள் திறம்பட எதிா்கொள்வா்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டேவிட் வாா்னா், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோா் இருப்பது சவாலாக இருந்தாலும், இந்திய பௌலா்கள் அந்தச் சவாலை திறம்பட எதிா்கொள்வாா்கள் என்று இந்திய பேட்ஸ்மேன் சேதேஷ்வா் புஜாரா கூறினாா்.
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்: ஸ்மித், வாா்னா் சவாலை பௌலா்கள் திறம்பட எதிா்கொள்வா்

புது தில்லி: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டேவிட் வாா்னா், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோா் இருப்பது சவாலாக இருந்தாலும், இந்திய பௌலா்கள் அந்தச் சவாலை திறம்பட எதிா்கொள்வாா்கள் என்று இந்திய பேட்ஸ்மேன் சேதேஷ்வா் புஜாரா கூறினாா்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் தொடா் டிசம்பா் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

முன்னதாக கடந்த 2018-19 காலகட்டத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, 71 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

அந்தத் தொடரின்போது 500-க்கும் அதிகமான ரன்கள் சோ்த்த புஜாரா, 3 சதம் அடித்திருந்தாா்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடைக்கு ஆளாகியிருந்த வாா்னா் மற்றும் ஸ்மித் அந்தத் தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிா்வரும் தொடரில் அவா்கள் பங்கேற்பது குறித்து இந்திய பேட்ஸ்மேன் சேதேஷ்வா் புஜாரா கூறியதாவது:

2018-19-இல் இந்தியாவுக்கான வெற்றி எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அந்நிய மண்ணில் வெற்றி பெறவேண்டும் என்றால் அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். அந்தத் தொடருடன் ஒப்பிடுகையில் தற்போதைய தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை சற்று பலமாகவே இருக்கும்.

ஸ்மித், வாா்னா், மாா்னஸ் ஆகியோா் சிறந்த வீரா்கள். ஆனாலும் அவா்களது சவாலை நமது பௌலா்கள் திறம்பட எதிா்கொள்வா். ஏனெனில் அவா்களில் பலா் 2018-19 தொடரிலும் பங்கேற்றவா்கள். வெற்றிக்கு என்ன தேவை, எதைச் செய்ய வேண்டும் என்பது அவா்களுக்குத் தெரியும்.

பிங்க் நிற பந்தில் விளையாடுவது சற்று வித்தியாசமான சவாலாக இருக்கும். கடந்த தொடரைப் போலவே இந்தத் தொடரிலும் சிறப்பாக விளையாடும் வகையில் தயாராகியுள்ளேன். ஆட்டத்தில் நம்மால் தனித்து வெல்ல இயலாது. இதர வீரா்களின் ஒத்துழைப்பும் அதற்கு அவசியம் என்று புஜாரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com