இந்திய அணியில் இடம்பெறாத ஏமாற்றமும், ரோஹித்தின் ஊக்கமும்: மனம் திறக்கும் சூர்யகுமார் யாதவ்

​ஆஸ்திரேலிய தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறாததை அறிந்தபோது ரோஹித் சர்மா அளித்த ஊக்கம் பெரிதும் உதவியதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பெறாத ஏமாற்றமும், ரோஹித்தின் ஊக்கமும்: மனம் திறக்கும் சூர்யகுமார் யாதவ்


ஆஸ்திரேலிய தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறாததை அறிந்தபோது ரோஹித் சர்மா அளித்த ஊக்கம் பெரிதும் உதவியதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாமல் இருப்பது தொடர்ச்சியாக விமரிசனமாக உள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படாதது மீண்டும் விமரிசனத்தை எழுப்பியது.

இந்த நிலையில், இந்திய அணிக்குத் தேர்வு செய்யாதபோது அடைந்த ஏமாற்றம் மற்றும் ரோஹித் சர்மா அளித்த ஊக்கம் குறித்தும் சூர்யகுமார் யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் பேசியதாவது:

“அந்த நேரத்தில் நான் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்தேன். அப்போது அருகிலிருந்த ரோஹித் சர்மா என்னைப் பார்த்தார். நான் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறினேன். ஏனென்றால் நான் நல்ல செய்தியை எதிர்பாத்திருந்ததை அவரால் பார்த்திருக்க முடியும்.

அதன்பிறகு அவர் என்னிடம் கூறினார், ‘அணிக்கு (மும்பை இந்தியன்ஸ்) நீ தற்போது சிறப்பான பணியை செய்து வருவதாக நான் நம்புகிறேன். இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாதது குறித்து சிந்திப்பதைத் தவிர்த்து ஐபிஎல்-இன் முதல் நாளிலிருந்து என்ன செய்து வருகிறாயோ அதையே தொடர்ந்து கடைப்பிடி. சரியான நேரத்தில் உனக்கான வாய்ப்பு கிடைக்கும். அது இன்றைக்கு வரலாம், நாளைக்கு வரலாம். ஆனால் அது வரும். நீ உன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’ என்று ரோஹித் என்னிடம் கூறினார்.

ரோஹித்தின் இந்த வார்த்தைகள் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாத ஏமாற்றத்திலிருந்து வெளியேற எனக்கு உதவியது. உண்மையில் நான் நன்றாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் எப்படி உணர்ந்தேன் என்பது எனக்குத் தெரியும். அவர்கூட அதை என் கண்களில் பார்த்திருக்க முடியும். அதிலிருந்து வெளியேற இந்த உரையாடல் எனக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது” என்றார் சூர்யகுமார் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com