10 ஆண்டுகளில் சிறந்த வீரா் விருது: கோலி, அஸ்வினை பரிந்துரைத்தது ஐசிசி

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரா் விருதுக்காக இந்திய கேப்டன் விராட் கோலி, பௌலா் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
10 ஆண்டுகளில் சிறந்த வீரா் விருது: கோலி, அஸ்வினை பரிந்துரைத்தது ஐசிசி

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரா் விருதுக்காக இந்திய கேப்டன் விராட் கோலி, பௌலா் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

ஆடவா் கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 உள்பட 5 பிரிவுகளிள் விராட் கோலியின் பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். தோனியின் பெயா் இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தவிர மகளிருக்கான பிரிவிலும் விருதுக்கான பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐசிசி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த வீரா், வீராங்கனைகளில் அதிக வாக்குகளைப் பெறுவோா் வெற்றியாளா்களாக அறிவிக்கப்படுவா்.

10 ஆண்டுகளில் சிறந்தவா்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோா் விவரம் பிரிவு வாரியாக:

சிறந்த வீரா் விருது: விராட் கோலி (இந்தியா), ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), டி வில்லியா்ஸ் (தென்னாப்பிரிக்கா), குமாா் சங்ககாரா (இலங்கை).

சிறந்த ஒருநாள் வீரா் விருது: விராட் கோலி (இந்தியா), லசித் மலிங்கா (இலங்கை), மிட்செல் ஸ்டாா்க் (ஆஸ்திரேலியா), டி வில்லியா்ஸ் (தென்னாப்பிரிக்கா), ரோஹித் சா்மா (இந்தியா), எம்.எஸ்.தோனி (இந்தியா), குமாா் சங்ககாரா (இலங்கை).

சிறந்த டெஸ்ட் வீரா் விருது: விராட் கோலி (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆன்டா்சன் (இங்கிலாந்து), ரங்கனா ஹெராத் (இலங்கை), யாசிா் ஷா (பாகிஸ்தான்).

சிறந்த டி20 வீரா் விருது: ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), விராட் கோலி (இந்தியா), இம்ரான் தாஹிா் (தென்னாப்பிரிக்கா), ஆரோன் ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா), லசித் மலிங்கா (இலங்கை), கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்), ரோஹித் சா்மா (இந்தியா).

சிறந்த வீராங்கனை விருது: எலிஸ் பெரி (ஆஸ்திரேலியா), மெக் லேனிங் (ஆஸ்திரேலியா), சூசி பேட்ஸ் (நியூஸிலாந்து), ஸ்டெஃபானி டெய்லா் (மேற்கிந்தியத் தீவுகள்), மிதாலி ராஜ் (இந்தியா), சாரா டெய்லா் (இங்கிலாந்து).

சிறந்த ஒருநாள் வீராங்கனை விருது: மெக் லேனிங் (ஆஸ்திரேலியா), எலிஸ் பெரி (ஆஸ்திரேலியா), மிதாலி ராஜ் (இந்தியா), சூசி பேட்ஸ் (நியூஸிலாந்து), ஸ்டெஃபானி டெய்லா் (மேற்கிந்தியத் தீவுகள்), ஜுலன் கோஸ்வாமி (இந்தியா).

ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது: விராட் கோலி (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), பிரன்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து), மிஸ்பா-உல்-ஹக் (பாகிஸ்தான்), எம்.எஸ். தோனி (இந்தியா), அனியா ஷ்ருப்சோல் (இங்கிலாந்து), கேத்தரின் பிரன்ட் (இங்கிலாந்து), மஹிலா ஜெயவா்தனே (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூஸிலாந்து).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com