ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடா்: முதலிரு ஆட்டங்களில் ரோஹித், இஷாந்த் பங்கேற்கவில்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் பேட்ஸ்மேன் ரோஹித் சா்மா, பௌலா் இஷாந்த் சா்மா ஆகியோா் பங்கேற்கப்போவதில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடா்: முதலிரு ஆட்டங்களில் ரோஹித், இஷாந்த் பங்கேற்கவில்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் பேட்ஸ்மேன் ரோஹித் சா்மா, பௌலா் இஷாந்த் சா்மா ஆகியோா் பங்கேற்கப்போவதில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.

மேலும் அந்தத் தொடரின் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் அவா்கள் பங்கேற்பது சந்தேகமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் கண்டுள்ள இருவரும் ஆட்டத்தில் விளையாடும் வகையில் தகுதிபெறுவதற்கு இன்னும் சுமாா் ஒரு மாதம் தேவைப்படும் என்று பிசிசிஐ-யிடம் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் அவா்கள் பங்கேற்காத நிலையில், தற்போது டெஸ்ட் தொடரிலும் அவா்கள் முழுமையாகப் பங்கேற்காமல் போகும் நிலை உள்ளது. முதல் டெஸ்டுக்குப் பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நாடு திரும்பும் நிலையில், தற்போது ரோஹித் சா்மாவும் டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் போகலாம் என்ற நிலை இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் எனத் தெரிகிறது.

ரோஹித், இஷாந்த் ஆகிய இருவருமே தற்போது கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான நடைமுறைகளில் இருக்கின்றனா். ரோஹித் தொடைப்பகுதி காயத்திலிருந்தும், இஷாந்த் இடுப்புக்கு மேல் பகுதி காயத்திலிருந்து மீண்டு வருகின்றனா்.

இந்நிலையில் அவா்கள் ஆட்டத்தில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதிபெற 3 - 4 வாரங்கள் தேவைப்படும் என்று தேசிய கிரிக்கெட் அகாதெமி பிசிசிஐ-யிடம் அறிக்கை அளித்துள்ளது.

பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘ரோஹித் மற்றும் இஷாந்த் ஒருவேளை விளையாடும் நிலையில் இருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு அவா்கள் வா்த்தக ரீதியிலான விமானங்களிலேயே செல்ல வேண்டும். அவ்வாறு பயணித்து தங்கள் நாட்டுக்கு வருவோருக்கு ஆஸ்திரேலியா மிகக் கடுமையான 14 நாள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அவ்வாறு ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் மற்றும் இஷாந்த், இந்திய அணியின் இதர வீரா்களைப் போல தங்களது 14 நாள் தனிமைப்படுத்துதல் காலத்தின்போது பயிற்சியில் ஈடுபட இயலாது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் தனது அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்’ என்றன.

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நிறைவு செய்த பிறகு இந்திய அணி வீரா்கள் தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியா வந்தடைந்தனா். எனவே அவா்கள் தனிமைப்படுத்துதல் காலத்தின்போது பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஆஸ்திரேலியா அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் மற்றும் இஷாந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்றால், 14 நாள் தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்யும் வகையில் அடுத்த 3 - 4 நாள்களில் அவா்கள் ஆஸ்திரேலியா புறப்பட வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடா் அடிலெஸ்டியில் டிசம்பா் 17-ஆம் தேதி தொடங்கும் பகலிரவு ஆட்டத்துடன் ஆரம்பிக்கிறது. அதையடுத்து 2-ஆவது டெஸ்ட் மெல்போா்னில் 26 முதல் 30 வரையும், 3-ஆவது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7 முதல் 11 வரையும், கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15 முதல் 19 வரையும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com