இந்தியாவில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள நான்கு டெஸ்டுகள்: கங்குலி தகவல்

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது...
இந்தியாவில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள நான்கு டெஸ்டுகள்: கங்குலி தகவல்

2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்ததாவது:

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. பத்து அணிகள் வரை பங்கேற்கும் ஒரு போட்டியை நடத்துவதை விடவும் இரு நாடுகள் பங்கேற்கும் தொடர்களை நடத்துவது எளிதானது. 

கரோனாவின் 2-ம் அலை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். மும்பை, தில்லியில் கரோனா நோயாளிகள் அதிகமாகிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. எனவே கவனமாக இத்தொடரை நடத்த வேண்டியிருக்கிறது. 

அடுத்த ஐபிஎல் போட்டியை நடத்த இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன. அதை இந்தியாவில் நடத்தவே முயற்சி செய்து வருகிறோம். ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இங்கு போட்டி நடக்கும்போது பார்த்தால் தான் தெரியும் என அனைவரிடமும் கூறுவேன். அதேபோல இந்தியாவில் உள்ளூர் போட்டிகளையும் நடத்த தயாராகி வருகிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com