'சிட்னியில் பந்துவீச கற்றுக்கொடுத்த பாண்டியா': கோலி-பிஞ்ச்

சிட்னி ஆடுகளத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்று மற்ற பந்துவீச்சாளர்களுக்கு ஹார்திக் பாண்டியா கற்றுக்கொடுத்ததாக இந்தியக் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
'சிட்னியில் பந்துவீச கற்றுக்கொடுத்த பாண்டியா': கோலி-பிஞ்ச்


சிட்னி ஆடுகளத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்று மற்ற பந்துவீச்சாளர்களுக்கு ஹார்திக் பாண்டியா கற்றுக்கொடுத்ததாக இந்தியக் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சும் இதை ஒப்புக்கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 389 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் சொதப்பிய நிலையில், வேறு வழியின்றி பந்துவீசிய ஹார்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசினார். 

அனைவரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து வந்த நிலையில், இவர் மட்டும் 4 ஓவர்களை சிறப்பாக வீசினார். முக்கியமாக ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். இவர் 4 ஓவர்களில் நிறைய பந்துகளை மெதுவாக வீசினார். அதுவே அவருக்குப் பலனளித்தது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களும் நிறைய பந்துகளை மெதுவாக வீசினார். பாண்டியா பந்துவீச்சைப் பார்த்து கணித்திருக்கக்கூடும்.

இதுபற்றி பரிசளிப்பு விழாவில் விராட் கோலி தெரிவித்ததாவது:

"இந்த ஆடுகளத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதற்கான பந்துவீச்சு திட்டத்தை அவர் அளித்துவிட்டார். நிறைய பந்துகளை மெதுவாக வீசினார்."

கோலியைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் இதுபற்றி பேசியதாவது:

"விராட் கூறியதுபோல் ஹார்திக் பந்துவீச்சிலிருந்து எப்படி பந்துவீச வேண்டும் என்பதற்கான திட்டம் எங்களுக்கு கிடைத்தது. அவருடைய வேகம் குறைந்த பந்துகள் அடிப்பதற்கு சிரமமாக இருந்தது."

ஹார்திக் பாண்டியா சுமார் ஓராண்டுக்குப் பிறகு பந்துவீசினாலும், இந்த ஆடுகளத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்று உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு கற்றுக்கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com