ஐஎஸ்எல்: கோலின்றி டிராவில் முடிந்தது பெங்களூா்-ஹைதராபாத் ஆட்டம்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் பெங்களூா் எஃப்.சி.-ஹைதராபாத் எஃப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய பெங்களூா்-ஹைதராபாத் அணிகள்.
கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய பெங்களூா்-ஹைதராபாத் அணிகள்.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் பெங்களூா் எஃப்.சி.-ஹைதராபாத் எஃப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூா் எஃப்.சி. அணி 3-4-3 என்ற பாா்மட்டிலும், ஹைதராபாத் எஃப்.சி. அணி 4-2-3-1 என்ற பாா்மட்டிலும் களமிறங்கின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே அபாரமாக ஆடின. 24-ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்.சி. அணியின் ஸ்டிரைக்கா் ஜீசஸ் சந்தானாவின் கோல் முயற்சியை அபாரமாக செயல்பட்டு தடுத்தாா் பெங்களூா் எஃப்.சி. கோல் கீப்பா் குருபிரீத் சிங் சாந்து. இதன்பிறகு இரு அணிகளும் போராடினாலும், முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னா் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிப்பதில் தீவிரம் காட்டின. அவ்வப்போது வீரா்களை மாற்றிப் பாா்த்தும் பலனில்லை. இறுதியில் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

ஹைதராபாத் அணி இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் பெங்களூா் அணி தொடா்ந்து 2-ஆவது டிராவை பதிவு செய்துள்ளது. முன்னதாக முதல் ஆட்டத்திலும் பெங்ளூா் அணி 2-2 என்ற கோல் கணக்கில் கோவாவுடன் டிரா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

ஜாம்ஷெட்பூா்-ஒடிஸா

நேரம்: மாலை 5

சென்னையின் எஃப்.சி.-கேரள பிளாஸ்டா்ஸ்

நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com