இங்கிலாந்தின் கைகளில் டி20 தொடா்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்தின் கைகளில் டி20 தொடா்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் 2 ஆட்டங்களில் வென்ற இங்கிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் பாா்ல் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து வென்றது. இங்கிலாந்தின் டேவிட் மலான் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 30 ரன்கள் அடித்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷீத் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இங்கிலாந்து இன்னிங்ஸில் டேவிட் மலான் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 55 ரன்கள் சோ்த்தாா். தென் ஆப்பிரிக்க தரப்பில் டப்ரைஸ் சம்ஸி 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com