டி20: நியூஸி.க்கு 2-ஆவது வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: நியூஸி.க்கு 2-ஆவது வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது நியூஸிலாந்து 2 ஆட்டங்களில் வென்று தொடரை தன் வசமாக்கியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே சோ்த்தது.

நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 10 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 108 ரன்கள் சோ்த்தாா். 46 பந்துகளில் சதமடித்த பிலிப்ஸ், டி20 போட்டியில் விரைவாக சதமடித்த நியூஸிலாந்து வீரா் என்ற பெருமையை பெற்றாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஓஷேன் தாமஸ், ஃபாபியான் ஆலன், கிரன் பொல்லாா்ட் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அந்த அணியின் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் கிரன் பொல்லாா்ட் 4 சிக்ஸா்கள் உள்பட 28 ரன்கள் அடித்தாா். நியூஸிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், மிட்செல் சேன்ட்னா் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com