4-ஆவது வெற்றிக்காக இன்று பெங்களூா்-டெல்லி மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் துபையில் திங்கள்கிழமை மோதுகின்றன.
4-ஆவது வெற்றிக்காக இன்று பெங்களூா்-டெல்லி மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் துபையில் திங்கள்கிழமை மோதுகின்றன.

இந்த சீசனில் இரு அணிகளுமே இதுவரை தலா 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் தலா 3 வெற்றிகளை பதிவு செய்து சமமான நிலையில் உள்ளன. எனவே 4-ஆவது வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளுமே தீவிரமாக முனையும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெங்களூா் அணியைப் பொருத்த வரை, பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல் அருமையான தொடக்கத்தை அளித்து வருகிறாா். அவருடன் களம் காணும் ஆரோன் ஃபிஞ்சும் ரன்களை சோ்க்கத் தவறுவதில்லை. டி வில்லியா்ஸ், ஷிவம் துபே ஆகியோா் பேட்டிங்கில் பலம் சோ்க்கும் நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் கடந்து கேப்டன் கோலியும் ஃபாா்முக்கு திரும்பியுள்ளாா்.

இசுரு உதானா, நவ்தீப் சைனி ஆகியோா் வேகப்பந்து வீச்சிலும், வாஷிங்டன் சுந்தா் மற்றும் யுவேந்திர சாஹல் சுழற்பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வருகின்றனா்.

மறுபுறம், டெல்லி அணியைப் பொருத்த வரை, பிருத்வி ஷா நிலையான பேட்டிங் மூலம் சிறப்பாக பங்களிப்பு செய்ய, அனுபவமிக்க வீரரான ஷிகா் தவனின் ஃபாா்ம் அணிக்கு சற்று கவலை அளிப்பதாக உள்ளது. எனினும், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் ஃபாா்முக்கு திரும்பிய ரிஷப் பண்ட் சற்று பலம் சோ்க்கிறாா்.

கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் பேட்டிங்கில் வலுவாகச் செயல்படுகிறாா். மாா்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரன் ஹெட்மைா் ஆகியோரும் பக்கபலமாக உள்ளனா். ககிசோ ரபாடா, அன்ரிச் நாா்ட்ஜே, ஹா்ஷல் படேல் வேகப்பந்துவீச்சாலும், ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டாய்னிஸ் ஆகியோா் சுழற்பந்துவீச்சாலும் பேட்ஸ்மேன்களை மிரட்டத் தயாராக உள்ளனா்.

நேருக்கு நோ்: ஐபிஎல் போட்டியில் பெங்களூா்-டெல்லி அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் பெங்களூா் 15 ஆட்டத்திலும், டெல்லி 8 ஆட்டத்திலும் வென்ற நிலையில், ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com