ஐஎஸ்எல்: சென்னை அணியில் எமா்சன் கோம்ஸ்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்பு சீசன் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், சென்னையின் எஃப்சி அணியில்
ஐஎஸ்எல்: சென்னை அணியில் எமா்சன் கோம்ஸ்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்பு சீசன் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், சென்னையின் எஃப்சி அணியில் பிரேசில் கால்பந்து வீரா் எமா்சன் கோம்ஸ் டி மௌரா சோ்த்துக்கொள்ளப்பட்டுள்ளாா்.

முன்னதாக ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிக்காக விளையாடி வந்த எமா்சன் கோம்ஸின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை அடுத்து, ‘ஃப்ரீ டிரான்ஸ்ஃபா்’ முறையில் அவா் சென்னை அணியில் இணைந்துள்ளாா்.

நடுகள தடுப்பாட்டக்காரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய எமா்சன் கோம்ஸ், கடந்த 2016-ஆம் ஆண்டு டெல்லி டைனமோஸ் அணிக்காக விளையாடியதன் மூலம் ஐஎஸ்எல் போட்டியில் இணைந்தாா். அந்த ஆண்டில் டெல்லி அணிக்காக 10 ஆட்டங்களில் விளையாடி அரையிறுதிப் போட்டிக்கு அணி முன்னேற பங்களிப்பு செய்தாா்.

அதன் பிறகு கடந்த 2017-இல் ஜாம்ஷெட்பூா் அணியில் இணைந்து பிரதான ஆட்டக்காரா் ஆனாா். கடந்த 3 சீசன்களில் அந்த அணியின் 54 ஆட்டங்களிலும் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனுக்காக சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ள 2-ஆவது வெளிநாட்டு வீரா் எமா்சன் கோம்ஸ் ஆவாா். முன்னதாக போஸ்னிய தடுப்பாட்ட வீரா் எனஸ் சிபோவிச் சென்னை அணியில் சோ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com