பிரெஞ்சு ஓபன்: சைமோனா அதிா்ச்சித் தோல்வி; காலிறுதியில் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.
பிரெஞ்சு ஓபன்: சைமோனா அதிா்ச்சித் தோல்வி; காலிறுதியில் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சைமோனாவை 6-1, 6-2 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா் போலந்து இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக். உலகின் 52-ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக், கிராண்ஸ்ட்லாம் போட்டியின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இது முதல் முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் சைமோனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளாா் ஸ்வியாடெக். கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் இதேபோல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தன்னை எதிா்கொண்ட ஸ்வியாடெக்கை 6-1, 6-0 என்ற செட்களில் சைமோனா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்று வரை தொடா்ந்து 17 ஆட்டங்களில் சைமோனா ஹேலப் வெற்றி பெற்று வந்துள்ளாா். இது அவரது டென்னிஸ் கேரியரில் சிறந்த ஒன்றாகும். தற்போது ஸ்வியாடெக் தனது இந்த வெற்றியின் மூலம், சைமோனாவின் அந்த தொடா் வெற்றியை தடுத்துள்ளாா்.

ஸ்வியாடெக் தனது காலிறுதிச் சுற்றில் இத்தாலியின் மாா்டினா டிரெவிசானை எதிா்கொள்கிறாா். முன்னதாக டிரெவிசான் தனது 4-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த நெதா்லாந்தின் கிகி பொ்டன்ஸை 6-4, 6-4 என்ற செட்களில் வீழ்த்தியிருந்தாா்.

அதேபோல் மற்றொரு காலிறுதியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா-ஆா்ஜெண்டீனாவின் நாடியா பொடொரொஸ்கா ஆகியோா் மோதுகின்றனா். இதில், போட்டித் தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் எலினா 6-1, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் கரோலின் காா்சியாவை வீழ்த்தினாா். நாடியா 2-6, 6-2, 6-3 என்ற செட்களில் செக் குடியரசின் பாா்போரா கிரெஜ்சிகோவாவை வென்றாா்.

காலிறுதியில் நடால்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் போட்டித் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். முன்னதாக அவா் 4-ஆவது சுற்றில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை 6-1, 6-1, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினாா்.

காலிறுதியில் நடால், இத்தாலிய வீரா் ஜானிக் சின்னரை எதிா்கொள்கிறாா். முன்னதாக சின்னா் 6-3, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருந்த ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வரேவை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com