பிரெஞ்சு ஓபன்: தோல்வியை தழுவினார் ஸ்விடோலினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு உக்ரைனின் எலினா ஸ்விடோலினா வெளியேறினார். 
பிரெஞ்சு ஓபன்: தோல்வியை தழுவினார் ஸ்விடோலினா

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு உக்ரைனின் எலினா ஸ்விடோலினா வெளியேறினார். 
போட்டித் தரவரிசையில் 3}ஆம் இடத்தில் இருந்த ஸ்விடோலினா தனது காலிறுதியில் ஆர்ஜெண்டீனாவின் நாடியா பொடொராஸ்காவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினாவுக்கு கடுமையாக சவால் அளித்தார் நாடியா. ஸ்விடோலினா ஒரு செட்டைக் கூட கைப்பற்ற முடியாதபடி செய்த நாடியா 6}2, 6}4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 
பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் ஸ்விடோலினா தோல்வியை சந்திப்பது இது 3}ஆவது முறை. முன்னதாக 2015 மற்றும் 2017}ஆம் ஆண்டுகளிலும் அவர் இந்தச்சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளார். 
மறுபுறம், உலகின் முதல் 20 நிலைக்கு உள்ளாக இருக்கும் வீராங்கனை ஒருவரை நாடியா எதிர்கொண்டது இதுவே முதல் முறையாகும். உலகின் 131}ஆம் நிலையில் உள்ள அவர், பிரெஞ்சு ஓபன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் தகுதிச்சுற்று வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 
அதேபோல், இந்தப் போட்டிக்கு முன்பாக, நாடியா இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் பிரதான சுற்றுக்கு முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
கடந்த 2004}ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரெஞ்சு ஓபன் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆர்ஜெண்டீன வீராங்கனை என்ற பெயரையும் நாடியா பெற்றுள்ளார். அந்த ஆண்டில் ஆர்ஜெண்டீன வீராங்கனை பாவ்லோ சுவாரெஸ் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். 
தற்போது நாடியா தனது அரையிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக் அல்லது இத்தாலியின் மார்டினா டிரெவிசான் ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்கிறார். 
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6}4, 4}6, 6}4 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 30}ஆவது இடத்தில் இருந்த டுனீசியாவின் ஒனஸ் ஜாபரை வீழ்த்தினார். இதையடுத்து காலின்ஸ் தனது அரையிறுதியில் சக நாட்டவரான சோஃபியா கெனின்ûஸ எதிர்கொள்கிறார். 


அரையிறுதியில் கரீனோ பஸ்டா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டா அரையிறுதிக்கு முன்னேறினார். அந்தச்சுற்றில் அவர் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். 

போட்டித்தரவரிசையில் 17}ஆவது இடத்தில் இருக்கும் பாப்லோ தனது காலிறுதியில் 6}2, 7}5, 6}2 என்ற செட்களில் ஜெர்மனியின் டேனியல் அல்ட்மைரை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com