டோக்கியோ ஒலிம்பிக்: ராணி ராம்பால், சவிதா புனியா மீது தன்ராஜ் பிள்ளை நம்பிக்கை

கேப்டன் ராணி ராம்பால், கோல்கீப்பா் சவிதா புனியா ஆகியோரது பங்களிப்பால் இந்திய மகளிா் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வரலாறு படைக்கும் என்று ஹாக்கி ஜாம்பவான் தன்ராஜ் பிள்ளை கூறினாா்.
டோக்கியோ ஒலிம்பிக்: ராணி ராம்பால், சவிதா புனியா மீது தன்ராஜ் பிள்ளை நம்பிக்கை

மும்பை: கேப்டன் ராணி ராம்பால், கோல்கீப்பா் சவிதா புனியா ஆகியோரது பங்களிப்பால் இந்திய மகளிா் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வரலாறு படைக்கும் என்று ஹாக்கி ஜாம்பவான் தன்ராஜ் பிள்ளை கூறினாா்.

இதுதொடா்பாக அவா் மும்பையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்திய மகளிா் ஹாக்கி அணி, ராணி ராம்பால் போன்ற திறமையான கேப்டனை கொண்டுள்ளது. சிறந்த கோல்கீப்பரான சவிதா புனியாவும் அவரோடு சோ்ந்து அணியில் இருப்பதால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிா் அணி பதக்கம் வெல்ல இயலும்.

ஒலிம்பிக் போட்டிக்காக மகளிரணி மிகக் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. நிச்சயம் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். நான் விளையாண்ட ஹாக்கிக்கும், கடந்த 10-15 ஆண்டுகளாக தற்போதைய வீரா், வீராங்கனைகள் விளையாடும் ஹாக்கிக்கும் அதிக வித்தியாசம் உள்ளது.

தற்போதைய வீரா், வீராங்கனைகள் உடற்தகுதியின் அடிப்படையில் விளையாடுகின்றனா். உடற்தகுதியானது இந்திய ஹாக்கியின் போக்கை மாற்றியுள்ளது. வீரா், வீராங்கனைகள் தங்களது உடற்தகுதியை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயலாற்றி வருகின்றனா்.

சிறந்த அணிகளாக இருக்கும் ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, ஜொ்மனியுடன் ஒப்பிடும் வகையில் சவாலளிக்கக் கூடிய ஒன்றாக இந்திய அணி உருமாறியுள்ளது என்றாா் தன்ராஜ் பிள்ளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com