ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சென்னை அணிக்கு 3ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சென்னை அணிக்கு 3ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதின. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் வழக்கத்துக்கு மாறாக பாப் டு பிளெஸ்ஸுடன் சாம் கரண் துவக்க வீரராக களமிறங்கினார். ஆனால் டு பிளெஸ்ஸி சந்தீப் சர்மா வீசிய 3ஆவது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து வாட்சனுடன் ஜோடி சேர்ந்த கரண் அதிரடியாக ஆடினார். 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கரண் சந்தீப் ஓவரில் போல்டானார். இதன்பின் ராயுடு-வாட்சன் ஜோடி 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க ஸ்கோர் உயர்ந்தது. இந்நிலையில் வாட்சன் (42), ராயுடு (41) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தோனியும் ஜடேஜாவும் இணைந்து கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். 

நடராஜ் வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு ஹிமாலய சிக்ஸ் அடித்த தோனி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பின் வந்த பிராவோ ரன் எடுக்காமல் அவுட்டானார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்த ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.

பின்னர் 168 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் வில்லியம்ஸ் தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. அவர் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சென்னை அணியை பொறுத்தவரை கரண் சர்மா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com