தேர்வுக் குழு தலைவர்: மிஸ்பா விலகல்

பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து அடுத்த மாதம் விலகப்போவதாக மிஸ்பா-உல்-ஹக் புதன்கிழமை தெரிவித்தார். 
தேர்வுக் குழு தலைவர்: மிஸ்பா விலகல்


கராச்சி,: பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து அடுத்த மாதம் விலகப்போவதாக மிஸ்பா-உல்-ஹக் புதன்கிழமை தெரிவித்தார். 
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருக்கும் அவர், இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டதாகவும், இனி பயிற்சியாளர் பொறுப்பில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.  
உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் அங்கம் வகித்த அரசு துறை சார்ந்த அணிகளை நீக்குவதென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிஸ்பா, மூத்த வீரர்களான அஸார் அலி, முகமது ஹஃபீஸ் ஆகியோர் கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தனர். 
இந்த விவகாரத்தை தன்னிடம் ஆலோசிக்காமல் நேரடியாக பிரதமரை அணுகி பேசியதற்காக மிஸ்பா உள்ளிட்டோர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் இருந்தது. இத்தகைய சூழலில் மிஸ்பா தேர்வுக் குழு தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக தெரிவித்துள்ளார். 
எனினும், இது தனது சுயமான முடிவென்றும், இதில் வாரியத்தின் எந்த நெருக்கடியும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com