செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன்: ஷபோவெலாவ் முன்னேற்றம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டென்னிஸ் போட்டியில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன்: ஷபோவெலாவ் முன்னேற்றம்


செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டென்னிஸ் போட்டியில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 
போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் அவர், முதல் சுற்றில் செர்பியாவின் விக்டர் டிராய்கியை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். 
ஷபோவெலாவ் தனது 3-ஆவது சுற்றில் பெலாரஸின் இலியா இவாஷ்காவை எதிர்கொள்கிறார். 
2-ஆவது சுற்றின் இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா 3-6, 7-6 (7/5), 6-2 என்ற செட்களில் குரோஷியாவின் நினோ செர்டாருசிச்சை வீழ்த்தினார். ரஷியாவின் ரோமன் சஃபியுலின் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஈகுவடாரின் எமிலியோ கோம்ûஸ வென்றார். ரோமன் அடுத்த சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருக்கும் குரோஷியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொள்கிறார். 
போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஆன்ட்ரு ருபலேவ் 6-2, 6-4 என்ற செட்களில் கனடாவின் வாசெக் போஸ்பிசிலை வீழ்த்தினார். போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் காரென் காச்சனோவ் 6-4, 6-4 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை வெற்றி கொண்டார். காச்சனோவ் தனது 3-ஆவது சுற்றில் சகநாட்டவரான அஸ்லான் கராட்சேவை எதிர்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com