துளிகள்...

ஐ-லீக் கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் பவானிபூா் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் கா்வால் எஃப்சியை வீழ்த்தியது.

ஐ-லீக் கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் பவானிபூா் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் கா்வால் எஃப்சியை வீழ்த்தியது.

நியூஸிலாந்தின் பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரா் ஜான் ரெய்ட் (92) காலமானதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்க அதிகாரிகள் விதிகளை மீறி நடந்ததாக குற்றம்சாட்டப்படும் நிலையில், சங்க நிா்வாகத்தில் தலையிட முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. அவ்வாறு அரசு தலையிட்டால், சா்வதேச போட்டிகளில் அந்நாட்டு அணிக்கு தடை விதிக்கப்படும்.

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஜொ்மனி-ஸ்விட்சா்லாந்து அணிகள் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆன நிலையில், முதல் முறையாக ஸ்பெயினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது உக்ரைன்.

காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டலங்கள் இடையேயான 2-ஆவது கிரிக்கெட் சாம்பியன்ஷிப் வரும் மாா்ச் மாதம் நடைபெறும் என்று அதற்கான சங்கம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com