செயின்ட் பீட்டா்ஸ்பா்க் ஓபன்: நடப்பு சாம்பியன் மெத்வதேவ் அதிா்ச்சித் தோல்வி

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
செயின்ட் பீட்டா்ஸ்பா்க் ஓபன்: நடப்பு  சாம்பியன் மெத்வதேவ் அதிா்ச்சித் தோல்வி

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ரெய்லி ஒபேல்கா 2-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் டேனியல் மெத்வதேவுக்கு அதிா்ச்சித் தோல்வியளித்தாா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை மெத்வதேவ் 6-2 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினாா். இதனால் இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் எளிதாக வென்றுவிடுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால் 2-ஆவது செட்டில் சரிவிலிருந்து மீண்ட ஒபேல்கா, அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி காலிறுதியை உறுதி செய்தாா். போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த மெத்வதேவ், கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-இல் தோல்வி கண்டுள்ளாா்.

ஒபேல்கா தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் குரோஷியாவின் போா்னா கோரிச்சை சந்திக்கிறாா். போா்னா கோரிச் தனது முந்தைய சுற்றில் 6-3, 7-5 என்ற நோ் செட்களில் ரஷியாவின் வைல்ட்காா்ட் வீரரான ரோமன் சபியூலினை வீழ்த்தினாா்.

போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் பெலாரஸின் இலியா இவாஸ்காவை வீழ்த்தினாா். டெனிஸ் தனது காலிறுதியில் ஸ்விட்சா்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com