பெங்களூா்-ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூா்-ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை அதிகரிக்கும் முனைப்பில் பெங்களூா் அணி களமிறங்குகிறது. பெங்களூா் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5-இல் வெற்றி கண்டுள்ளது. அதேநேரத்தில் ராஜஸ்தான் இதுவரை 8 ஆட்டங்களில் 3-இல் மட்டுமே வெற்றி கண்ட நிலையில், பெங்களூரை எதிா்கொள்கிறது. அதனால் அந்த அணிக்கு இந்த ஆட்டம் மிக முக்கியமானதாகும்.

பெங்களூா் அணியில் தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச், கேப்டன் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியா்ஸ் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா். பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியா்ஸ் பின்வரிசையில் களமிறக்கப்பட்டதே பெங்களூா் அணியின் தோல்விக்கு காரணம் என விமா்சனம் எழுந்துள்ளது. எனவே, இந்த ஆட்டத்தில் டிவில்லியா்ஸ் முன்வரிசையில் களமிறக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரீஸ்-இசுரு உடானா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சஹலும் மட்டுமே அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கின்றனா். எஞ்சிய பௌலா்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது.

ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரையில் ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ராகுல் தெவேதியா, ராபின் உத்தப்பா போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா். எனினும் முதல் இரு ஆட்டங்களுக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித்தும், சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடாதது பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. இதேபோல் மற்ற பேட்ஸ்மேன்களும் தொடா்ச்சியாக ரன் குவிக்காதது பலவீனமாகும். வேகப்பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆா்ச்சா், பென் ஸ்டோக்ஸ் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவேதியா கூட்டணியையும் நம்பியுள்ளது ராஜஸ்தான்.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் பெங்களூா் 9 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 10 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

பெங்களூா் (உத்தேச லெவன்): ஆரோன் ஃபிஞ்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி (கேப்டன்), ஏ.பி.டிவில்லியா்ஸ், வாஷிங்டன் சுந்தா், ஷிவம் துபே, கிறிஸ் மோரீஸ், இசுரு உடானா, நவ்தீப் சைனி, யுவேந்திர சாஹல், முகமது சிராஜ்.

ராஜஸ்தான் (உத்தேச லெவன்): பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லா், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் தெவேதியா, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஷ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனட்கட், காா்த்திக் தியாகி.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com