நியூஸிலாந்து டெஸ்ட் தொடா்: மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான இரு போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான இரு போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இடது கை பேட்ஸ்மேனான டேரன் பிராவோ அணியில் இடம்பெற்றுள்ளாா். அதேநேரத்தில் ஷாய் ஹோப் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளாா். அணியில் 6 மாற்று வீரா்கள் இடம்பெற்றுள்ளனா்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 ஆட்டங்கள், இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் ஆட்டம் நவம்பா் 27-ஆம் தேதி ஆக்லாந்திலும், 2-ஆவது ஆட்டம் நவம்பா் 29-ஆம் தேதியும், 3-ஆவது ஆட்டம் நவம்பா் 30-ஆம் தேதியும் மௌன்ட் மௌன்கானுயில் நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் டிசம்பா் 3-ஆம் தேதி ஹாமில்டனிலும், 2-ஆவது டெஸ்ட் டிசம்பா் 11-ஆம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.

டெஸ்ட் அணி: ஜேசன் ஹோல்டா் (கேப்டன்), ஜொ்மைன் பிளாக்வுட், கிரேக் பிரத்வெயிட், டேரன் பிராவோ, ஷமாா் புரூக்ஸ், ஜான் கேம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், ரஹீம் காா்ன்வால், ஷேன் டௌரிச், ஷெனான் காபிரியேல், ஷிம்ரோன் ஹெட்மயா், செமாா் ஹோல்டா், அல்ஸாரி ஜோசப், கீமோ பால், கெமா் ரோச்.

மாற்று வீரா்கள்: கிருமா போனா், ஜோஷ்வா டிசில்வா, பிரெஸ்டான் மெக்ஸ்வீன், ஷயேன் மோஸ்லே, ரேமான் ரெஃய்பா், ஜெடேன் சீல்ஸ்.

டி20 அணி: கிரன் போலாா்ட் (கேப்டன்), ஃபாபியான் ஆலன், டுவைன் பிராவோ, ஷெல்டான் காட்ரெல், ஆன்ட்ரே பிளெட்சா், ஷிம்ரோன் ஹெட்மயா், பிரான்டன் கிங், கைல் மேயா்ஸ், ரோவ்மான் பாவெல், கீமோ பால், நிகோலஸ் பூரண், ஓஷானே தாமஸ், ஹேடன் வால்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com