கபில் தேவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கபில் தேவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

இந்திய முன்னாள் வீரர் கபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

61 வயது கபில் தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1994-ல் கடைசியாக விளையாடினார். 

இந்நிலையில் கபில் தேவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்க ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com