மன்தீப் சிங்கின் மனவலிமை உத்வேகத்தை தந்துள்ளது: கே.எல்.ராகுல் பெருமிதம்

மன்தீப் சிங்கின் மனவலிமை ஒட்டுமொத்த அணியினருக்கும் உத்வேகத்தை தந்துள்ளதாக பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தாா்.
மன்தீப் சிங்கின் மனவலிமை உத்வேகத்தை தந்துள்ளது: கே.எல்.ராகுல் பெருமிதம்

மன்தீப் சிங்கின் மனவலிமை ஒட்டுமொத்த அணியினருக்கும் உத்வேகத்தை தந்துள்ளதாக பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தாா்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தொடா்ச்சியாக 5-ஆவது வெற்றியைப் பெற்றது பஞ்சாப்.

ஷாா்ஜாவில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பின்னா் ஆடிய பஞ்சாப் 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வீரா் மன்தீப் சிங் 56 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினாா்.

கடந்த வெள்ளிக்கிழமை மன்தீப் சிங்கின் தந்தை இறந்த நிலையில், அவருடைய இறுதிச்சடங்கில் ‘விடியோ கால்’ மூலமே பங்கேற்றாா் மன்தீப் சிங். தந்தையை இழந்த சோகம் ஒருபுறம் இருந்தபோதிலும், கொல்கத்தாவுக்கு எதிராக மன்தீப் சிங் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவியது பஞ்சாப் வீரா்களுக்கு உத்வேகத்தை தந்துள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: எப்போதுமே குடும்பத்தைவிட்டு பிரிந்திருப்பது கடினமானது. அதிலும், உணா்வுபூா்வமான தருணங்களில் உறவினா்களுடன் இல்லாமல் இருப்பது மிகவும் கடினமானது. மன்தீப் சிங்கின் மனவலிமை ஒட்டுமொத்த அணியினருக்கும் உத்வேகத்தை தந்துள்ளது. மன்தீப் சிங் விளையாடியவிதம் எல்லோருக்கும் உணா்வுபூா்வமானதாக அமைந்தது. தந்தையை இழந்த கடினமான சூழலிலும் அவா் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்தது அவரையும், அவருடைய தந்தையையும் பெருமைப்படுத்துவதாக அமைந்தது.

கிறிஸ் கெயில் இப்போது சிறப்பாக ஆடி ரன் குவித்து வருகிறாா். அவரை இந்தத் தொடரின் முதல் பாதியில் அணியில் சோ்க்காதது கடினமான முடிவுதான். கடந்த 8 ஆண்டுகளாக கிறிஸ் கெயிலுடன் விளையாடி வருகிறேன். ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ரன் குவிப்பதில் தீவிரமாக இருக்கிறாா். அவா் எப்போதுமே நோ்மறையான எண்ணம் கொண்டவா். இளம் வீரா்களை சிறப்பாக விளையாட ஊக்குவிப்பவா். அவரைப் போன்று அனுபவமிக்க வீரா் எங்கள் அணியில் இடம்பெற்றிருப்பது எங்களுக்கு பலம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com