சிஎஸ்கே நிலைமையைக் கண்டு சற்று கவலைப்படுவதாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் அறிவிப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிஎஸ்கே அணியின் நிலைமயைக் கண்டு சற்று கவலைப்படுவதாக..
படம் - பிடிஐ
படம் - பிடிஐ

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிஎஸ்கே அணியின் நிலைமயைக் கண்டு சற்று கவலைப்படுவதாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். சொந்தக் காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். 

சிஎஸ்கே அணியில் இரு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற அணிகள் துபை, அபுதாபியில் பயிற்சியை ஆரம்பித்துள்ள நிலையில் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் தங்கள் விடுதி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ஜோஷ் ஹேஸில்வுட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார். இத்தொடர்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவுள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தற்போதைய நிலவரம் பற்றிய தனது எண்ணங்களை ஹேஸில்வுட் கூறியதாவது:

எங்கள் அணியில் உள்ள வாட்சப் குழுவில் அனைத்துத் தகவல்களும் வெளியிடப்படுகின்றன. அதைப் பார்த்த பிறகு சற்று கவலையாக உள்ளது. யாருக்கும் கரோனா பாதிப்பு இருக்கக்கூடாது என்றுதான் நினைப்போம். அணி வீரர்கள் தங்களுடைய தனிமைப்படுத்துதல் காலத்தை விரைவில் முடித்துவிடுவார்கள். தற்போதைய தொடரில் தான் என்னுடைய கவனம் உள்ளது. ஐபிஎல் நெருங்கும்போது அதைப் பற்றி மேலும் அதிகமாக யோசிப்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com