இங்கிலாந்தில் முதல்முறையாக என்னை யாரும் இழிவுபடுத்தவில்லை: காலி மைதானத்தில் விளையாடிய வார்னர் பேட்டி

முதல்முறையாக இங்கிலாந்தில் என்னை யாரும் இழிவுபடுத்தவில்லை என காலி மைதானத்தில் விளையாடிய டேவிட் வார்னர் பேட்டியளித்துள்ளார்.
இங்கிலாந்தில் முதல்முறையாக என்னை யாரும் இழிவுபடுத்தவில்லை: காலி மைதானத்தில் விளையாடிய வார்னர் பேட்டி

இங்கிலாந்தில் முதல்முறையாக என்னை யாரும் இழிவுபடுத்தவில்லை என காலி மைதானத்தில் விளையாடிய டேவிட் வார்னர் பேட்டியளித்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடர் செளதாம்ப்டனிலும் ஒருநாள் தொடர் மான்செஸ்டரிலும் நடைபெறவுள்ளன. டி20 தொடர் நேற்று முதல் தொடங்கியது. செப்டம்பர் 4, 6, 8 தேதிகளில் டி20 தொடரும் செப்டம்பர் 11, 13, 16 தேதிகளில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடர் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பட்லர் 44, மலான் 66 ரன்கள் எடுத்தார்கள். 

பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி கடைசியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வார்னர் 58, ஃபிஞ்ச் 46 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் ஆஸி. அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதல் டி20 ஆட்டத்தில் விளையாடிய அனுபவம் பற்றி ஆஸி. பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் கூறியதாவது:
 
இங்கிலாந்தில் விளையாடுகிற போது முதல்முறையாக என்னை யாரும் இழிவுபடுத்தவில்லை. இது நன்றாக இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து இது போன்ற எதிர்வினைகள் கிடைக்கும். இதனால்தான் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் விளையாட விரும்புகிறோம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளையாடுவதில் சாதக அம்சங்கள் உள்ளன. 

சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இதிலிருந்து நிறைய அடைய விரும்புகிறோம். ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. எங்களை முழுவதுமாக வீழ்த்திவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நாங்கள் விளையாடி, எப்படி பவுண்டரிகள் அடிக்கவேண்டும் என்கிற திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். நடு ஓவர்களில் பவுண்டரிகள் அடித்துப் பழக வேண்டும் என்றார்.

2-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com