பிரெஞ்சு ஓபன் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி

இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டியின் ஆட்டங்களைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு ஓபன் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி

இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டியின் ஆட்டங்களைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மே 24- ஜூன் 7 தேதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் போட்டியின் ஆட்டங்களைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 11,500 ரசிகர்கள் ஆட்டங்களைப் பார்க்க அனுமதிக்கப்படவுள்ளார்கள். எனினும் தகுதிச்சுற்று ஆட்டங்களைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் ஆட்டங்களைப் பார்க்க வரும் 11 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com