சாதனையை நெருங்குகிறார் செரீனா வில்லியம்ஸ்: யு.எஸ். ஓபன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

சாதனையை நெருங்குகிறார் செரீனா வில்லியம்ஸ்: யு.எஸ். ஓபன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், யு.எஸ். ஓபன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், யு.எஸ். ஓபன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

இந்நிலையில் யு.எஸ். ஓபன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு 38 வயது செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். காலிறுதியில் பல்கேரியாவின் பிரோன்கோவா-வை 4-6, 6-3, 6-2 என வீழ்த்தினார். இதன்மூலம் தொடர்ச்சியாக 11-வது தடவையாக யு.எஸ். போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார். 2007-ல் காலிறுதியில் தோற்ற செரீனா அதன்பிறகு பங்கேற்ற அனைத்து யு.எஸ். ஓபன் போட்டிகளிலும் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

இந்த வருட யு.எஸ். ஓபன் அரையிறுதிச் சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அசரன்காவை எதிர்கொள்கிறார் செரீனா. இதற்கு முன்பு இருவரும் யு.எஸ். ஓபன் போட்டியில் 2012, 2013 இறுதிச்சுற்றுகளில் மோதி இரண்டிலும் செரீனா வெற்றி பெற்று கோப்பைகளை வென்றார். செரீனா இதுவரை ஆறு முறை யு.எஸ். ஓபன் கோப்பையை வென்றுள்ளார். கடந்த இரு வருடங்களாக இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 

இந்தமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை செரீனா வென்றுவிட்டால் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்கரட் கோர்ட்டின் சாதனையைச் சமன் செய்ததாக இருக்கும். அதனால் செரீனாவின் அரையிறுதிச் சுற்றின் முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com