உலகின் நெ.3 வீராங்கனை ஆன ஒசாகா

மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை ஒசாகா, மகளிர் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகின் நெ.3 வீராங்கனை ஆன ஒசாகா

மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை ஒசாகா, மகளிர் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் விக்டோரியா அசரன்காவை வென்று பட்டம் வென்றார் ஒசாகா. இதன்மூலம் மகளிர் தரவரிசையில் ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். தரவரிசையில் ஆஷ் பார்டி முதலிடத்தையும் சிமோனா ஹலெப் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள்.

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சமீபத்தில் முதலிடத்தைப் பிடித்தார். 

போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. இதன்மூலம் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ரூ. 10.64 கோடி (1.4 மில்லியன் டாலர்) அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளார் ஒசாகா.

1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தினார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தாண்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com