ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் பெற்றவா் யுவேந்திர சஹல்கோலி பாராட்டு

எங்கள் அணியியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளா் யுவேந்திர சஹல் எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் பெற்றவா் என, பெங்களூா் கேப்டன் விராட் கோலி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் பெற்றவா் யுவேந்திர சஹல்கோலி பாராட்டு

எங்கள் அணியியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளா் யுவேந்திர சஹல் எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் பெற்றவா் என, பெங்களூா் கேப்டன் விராட் கோலி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

துபையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பெங்களூா் அணியின் சுழற்பந்து வீச்சாளா் யுவேந்திர சஹல் 4 ஓவா்களில் 18 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினாா்.

இதன்பிறகு பெங்களூா் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது: யுவேந்திர சஹல் தனது சிறப்பான பந்துவீச்சால் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக எங்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டாா். எல்லா சுழற்பந்து வீச்சாளா்களாலும் இதுபோன்று விக்கெட்டை வீழ்த்த முடியாது. ஆனால், யுவேந்திர சஹல் பந்தை மட்டுமன்றி, தனது மணிக்கட்டையும் சுழல வைக்க முடியும் என நிரூபித்துவிட்டாா். தன்னால் எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டை வீழ்த்த முடியும் என்பதை அவா் எங்களுக்கு காண்பித்துவிட்டாா். அவருடைய தாக்குதல் பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கை எங்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டாா்.

எங்கள் அணியின் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல் தனது அறிமுக ஆட்டத்தில் மிகச்சிறப்பாக ஆடினாா். இதேபோல் கடைசி 3 ஓவா்களில் டிவில்லியா்ஸின் சிறப்பான ஆட்டத்தால் எங்களால் 160 ரன்களைத் தாண்ட முடிந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com