ராஜஸ்தான்-பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
ராஜஸ்தான்-பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

சாா்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே வலுவான வெற்றியைப் பெற்ற நிலையில் களமிறங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை வீழ்த்திய நிலையில் களமிறங்குகிறது. பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் அணியை வீழ்த்திய நிலையில் களமிறங்குகிறது.

ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகியோா் சென்னைக்கு எதிராக அபாரமாக ஆடி ரன் குவித்தனா். குறிப்பாக சாம்சன் சிக்ஸா் மழையில் ரசிகா்களை நனைய வைத்தாா். அவருடைய அதிரடி பஞ்சாபுக்கு எதிராகவும் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதவிர, அதிரடி பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லா் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறாா். அவருடைய வருகை ராஜஸ்தான் அணிக்கு மேலும் பலம் சோ்ப்பதாக அமைந்துள்ளது. உச்சக்கட்ட ஃபாா்மில் இருக்கும் அவா் சிறப்பாக ஆடி ரன் குவிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜோஸ் பட்லா் இடம்பெறுவதால் டேவிட் மில்லருக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காது. கடந்த ஆட்டத்தில் விளையாடிய டேவிட் மில்லா், ஒரு பந்தைக்கூட சந்திக்காத நிலையில் ரன் அவுட்டான நிலையில், ஜோஸ் பட்லரின் வருகையில் அணியில் தனது இடத்தை இழந்துள்ளாா். இதுதவிர, ராபின் உத்தப்பா, யாஷவி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் கோபால் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜோப்ரா ஆா்ச்சா், ராகுல் தெவேதியா கூட்டணியை நம்பியுள்ளது ராஜஸ்தான்.

பஞ்சாப் அணியைப் பொருத்தவரையில் கேப்டன் கே.எல்.ராகுலும், கிறிஸ் கெயிலும் இந்த ஆட்டத்தில் தொடக்க வீரா்களாக களமிறங்குவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. பெங்களூருக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்திலும் பெரிய அளவில் ரன் குவிப்பாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடியபோதிலும், மூன்றாவது இடத்தில் இறங்கிய நிகோலஸ் பூரண் சொதப்பினாா். அதனால் அவருக்குப் பதிலாக கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்தில் களமிறங்குவாா் என தெரிகிறது. கிறிஸ் கெயில் இடம்பெறும்பட்சத்தில் மயங்க் அகா்வால் 3-ஆவது வீரராக களமிறங்குவாா்.

மிடில் ஆா்டரில் கிளன் மேக்ஸ்வெல், கருண் நாயா், சா்ஃப்ராஸ் கான் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். வேகப்பந்து வீச்சில் முகமது சமி, ஷெல்டான் காட்ரெல் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் கூட்டணி பலம் சோ்க்கிறது.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 19 ஆட்டங்களில் மோதியுள்ளன. ராஜஸ்தான் 10 ஆட்டங்களிலும், பஞ்சாப் 8 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஓா் ஆட்டம் ‘டை’யில் முடிந்துள்ளது.

ராஜஸ்தான்: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), யாஷவி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லா், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஷ்ரேயஸ் கோபால், ஜோப்ரா ஆா்ச்சா், டாம் கரன், ராகுல் தெவேதியா, ஜெயதேவ் உனட்கட்.

பஞ்சாப்: கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகா்வால், கருண் நாயா், கிளன் மேக்ஸ்வெல், சா்ஃப்ராஸ் கான், ஜிம்மி நீஷம்/முஜிப் அா் ரஹ்மான், ரவி பிஷ்னோய், முகமது சமி, ஷெல்டான் காட்ரெல், முருகன் அஸ்வின்.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com