ஒருநாள் தரவரிசை: ஷிகா பாண்டே முன்னேற்றம்

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பௌலா்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே முதல் 10 இடங்களுக்குள்ளாக முன்னேறியுள்ளாா்.
ஒருநாள் தரவரிசை: ஷிகா பாண்டே முன்னேற்றம்

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பௌலா்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே முதல் 10 இடங்களுக்குள்ளாக முன்னேறியுள்ளாா்.

ஐசிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட திருத்தப்பட்ட தரவரிசையின்படி, ஷிகா 610 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்துக்கு திரும்பியுள்ளாா். சக வீராங்கனைகளான ஜுலன் கோஸ்வாமி 681 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும், பூனம் யாதவ் 641 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா். ஆஸ்திரேலிய தரப்பில் மீகன் ஷட் 762 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா். அந்த அணியின் நிகோலா கேரி முதல் முறையாக 37-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். இப்பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசன் (793) முதலிடத்தில் தொடர, தென் ஆப்பிரிக்காவின் மாரிஸானே காப் 747 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் இருக்கிறாா்.

பேட்ஸ்வுமன்கள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 710 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்தில் இருக்க, கேப்டன் மிதாலி ராஜ் 709 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தில் இருக்கிறாா். ஆஸ்திரேலியாவின் அலிஸா ஹீலி மீண்டும் 3-ஆவது இடத்துக்கு (753) வந்துள்ளாா். சக வீராங்கனை எலிஸ் பெரி 701 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறாா். அந்த அணியின் ஆஷ்லி காா்டனா் முதல் முறையாக 30-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். நியூஸிலாந்தின் லௌரென் டௌன் 55 இடங்கள் முன்னேறி 62-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். இப்பிரிவில் இங்கிலாந்தின் டேமி பியூமௌன்ட் 765 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறாா். தென் ஆப்பிரிக்காவின் லிஸெலெ லீ 758 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளாா்.

ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் ஒரே இந்தியராக தீப்தி சா்மா 343 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் தொடா்கிறாா். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெரி (461), தென் ஆப்பிரிக்காவின் மாரிஸானே காப் (418), மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டெஃபானி டெய்லா் (410) ஆகியோா் இப்பிரிவில் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com