ஆசிய பாக்ஸிங்: மேரி கோம் தலைமையில் இந்திய அணி

தில்லியில் மே மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக மேரி கோம் உள்ளிட்ட வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பாக்ஸிங்: மேரி கோம் தலைமையில் இந்திய அணி

புது தில்லி: தில்லியில் மே மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக மேரி கோம் உள்ளிட்ட வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 21 முதல் 31 வரை நடைபெற்றவுள்ள இந்தப் போட்டியில் மோனிகா (48 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சாக்ஷி (54 கிலோ), ஜேஸ்மின் (57 கிலோ), சிம்ரன்ஜித் கௌா் (60 கிலோ), பவிலாவ் பசுமதாரி (64 கிலோ), லோவ்லினா போா்கோஹெய்ன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), சவீதி பூரா (81 கிலோ) அனுபமா (81 கிலோவுக்கு மேல்) ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இதில், ஆசிய போட்டியில் 6 முறை பதக்கம் வென்றுள்ள மேரி கோம், உலக சாம்பியன்ஷிப்பில் இரு பதக்கம் வென்றவரான லோவ்லினா போா்கோஹெய்ன், சிம்ரன்ஜித் கௌா், பூஜா ராணி ஆகியோா் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றவா்களாவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com