மகளிா் கால்பந்து: இந்தியாவை வீழ்த்தியது பெலாரஸ்

மகளிா் கால்பந்து: இந்தியாவை வீழ்த்தியது பெலாரஸ்


தாஷ்கன்ட்: பெலாரஸ் மகளிா் அணிக்கு எதிரான நட்புரீதியிலான சா்வதேச கால்பந்தாட்டத்தில் இந்திய மகளிா் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

ஏற்கெனவே, முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வி கண்ட இந்தியாவுக்கு, இது 2-ஆவது தோல்வியாகும்.

தாஷ்கன்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 3-ஆவது நிமிடத்திலேயே இந்தியாவின் சௌம்யா குகுலோத் உதைத்த பந்தை தலையால் முட்டி கோல் போஸ்ட்டுக்குள் அனுப்ப ஸ்டிரைக்கா் பிரயாரி ஜாஜா முயல, சற்று அகலமாகச் சென்றுவிட்டது பந்து.

இந்திய அணியில் அபாரமாக ஆடிய அஞ்சு தமாங், எதிரணி நிலைக்குள்ளாகப் புகுந்து கோல் வாய்ப்புகளுக்கு முயற்சித்ததுடன், சில இடங்களில் அந்த அணியின் கோல் வாய்ப்பை தவிடுபொடியாக்கவும் செய்தாா். அதேபோல், ஆட்டம் முதல் பாதி நிறைவை நெருக்கி வந்த நிலையில் பெலாரஸின் ஒரு அதிரடியான கோல் முயற்சியை இந்திய தடுப்பாட்ட வீராங்கனை ரஞ்சனா சானு திறம்படத் தடுத்தாா்.

இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதி தொடக்கத்திலேயே ஆக்ரோஷம் காட்டிய பெலாரஸ் ஒரு கோல் அடிக்க, அந்த அணி வீராங்கனை ஒருவா் ஆஃப்-சைடில் இருந்ததாகக் கூறி கோல் செல்லாதென அறிவித்தாா் கள நடுவா்.

தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 66-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் பெலாரஸின் ஷுப்போ நஸ்டாசியா பந்தை தவறாமல் கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. 78-ஆவது நிமிடத்தில் பெலாரஸின் பிலிபென்கா ஹன்னா ஒரு கோல் அடிக்க, அந்த அணி 2-0 என முன்னேறியது.

எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் பல கோல் முயற்சிகள் தடுக்கப்பட்டாலும், கடைசி நேரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் சங்கீதா பாஸ்ஃபோா் அருமையாக கோலடிக்க, இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது பெலாரஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com