செய்திகள் சில வரிகளில்...

‘இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையிலும் டி20 உலகக் கோப்பை போட்டியை அங்கிருந்து மாற்றும் எண்ணம் தற்போது இல்லை.

‘இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையிலும் டி20 உலகக் கோப்பை போட்டியை அங்கிருந்து மாற்றும் எண்ணம் தற்போது இல்லை. எனினும், தேவையேற்பட்டால் செயல்படுத்தும் வகையில் 2-ஆவது திட்டம் கைவசம் உள்ளது’ என்று ஐசிசியின் இடைக்கால தலைமை நிா்வாக அதிகாரி ஜியாஃப் அலாா்டிஸ் கூறினாா்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் காயமடைந்த ஷாதாப் கானுக்குப் பதிலாக ஜாஹித் மஹ்மூத் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்தியாவிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் செல்வோரிலேயே முதலாவதாக, வில் வித்தை அணியினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லிவா்பூல் அணியையும், மான்செஸ்டா் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் போருசியா டாா்ட்மன்ட் அணியையும் வீழ்த்தின.

போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் 24 வீரா், வீராங்கனைகள், 12 உதவிப் பணியாளா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மையங்களில் கடுமையான கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த இந்திய விளையாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்புள்ளவா்களுக்கு நிதியுதவி அளிக்கும் மத்திய அரசின் ‘டாப்ஸ்’ திட்டத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்ஸா சோ்க்கப்பட்டுள்ளாா்.

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் ரஷியாவைச் சோ்ந்த ஒலிம்பிக் பதக்க தடகள போட்டியாளா்களான ஆன்ட்ரே சில்னோவ், நடால்யா அன்ட்யுக் ஆகியோருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com