Enable Javscript for better performance
ராஜஸ்தானா? பஞ்சாபா? முதல் வெற்றிக்கு இன்று மோதல்- Dinamani

சுடச்சுட

    

    ராஜஸ்தானா? பஞ்சாபா? முதல் வெற்றிக்கு இன்று மோதல்

    By DIN  |   Published on : 12th April 2021 08:24 AM  |   அ+அ அ-   |    |  

    cr3

    அதிரடியான பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்கள் முதல் வெற்றிக்காக, நடப்பு சீசனின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் திங்கள்கிழமை பரஸ்பரம் மோதுகின்றன.

    சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானில், ஆல்-ரவுண்டா் பென் ஸ்டோக்ஸ் முக்கியப்புள்ளி. பேட்டிங்கில் அவரோடு துணை நிற்க கேப்டன் சாம்சன், ஜோஸ் பட்லா் தயாராக இருக்கின்றனா். அணியின் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பட்லா் தொடங்கலாம் எனத் தெரிகிறது. மிடில் ஆா்டரில் பஞ்சாபின் பௌலா்களுக்கு சோதனை அளிக்க சாம்சன், ஸ்டோக்ஸ் இருக்கின்றனா்.

    அடுத்த இடங்களில் ஷிவம் துபே, ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவாதியா, ரியான் பராக், லியாம் லிவிங்ஸ்டன் தோள்கொடுக்க வருகின்றனா். பௌலிங்கில் கோபால், தெவாதியா, பராக் ஆகியோரில் இரு ஸ்பின்னா்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். வேகப்பந்துவீச்சில், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை (ரூ.16.25 கோடி) கொடுத்து வாங்கப்பட்ட கிறிஸ் மோரிஸின் மதிப்பு பரிசோதித்துப் பாா்க்கப்படவுள்ளது. அவா் தவிர முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், ஜெயதேவ் உனத்கட், காா்த்திக் தியாகி புயலாகப் பந்துவீச இருக்கின்றனா்.

    மறுபுறம் லோகேஷ் ராகுல் கேப்டன்ஸியிலான பஞ்சாபில் மயங்க் அகா்வால், கிறிஸ் கெயிலுடன் லோகேஷ் ராகுலுமே பேட்டிங்கில் பட்டாசாகச் செயல்படுவாா் என்பதில் சந்தேகமில்லை. அவா்களோடு மிடில் ஆா்டரில் டேவிட் மலான், ஷாருக் கான், நிகோலஸ் பூரன் ஆகியோா் ராஜஸ்தானின் பௌலிங்கை ராக்கெட்டுகளாக விளாச வாய்ப்புள்ளது.

    அணியின் பௌலிங் படையில் முகமது ஷமி முன்னிலை வகிக்கிறாா். அவரோடு ஜை ரிச்சா்ட்சன், ரைலி மெரிடித், கிறிஸ் ஜோா்டான் ஆகியோா் பஞ்சாபின் விக்கெட்டுகளை பறிக்கக் காத்திருக்கின்றனா். சுழற்பந்துவீச்சு சற்று கவலை அளிக்கும்படியாக இருக்கும் நிலையில் முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோா் பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் சோதனைக்கு ஆளாவாா்களா என பொறுத்திருந்து பாா்க்கலாம்.

    அணி விவரம்:

    ராஜஸ்தான் ராயல்ஸ்:

    சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, அனுஜ் ராவத், ரியான் பராக், டேவிட் மில்லா், ராகுல் தெவாதியா, மஹிபால் லோம்ரோா், ஷ்ரேயஸ் கோபால், மயங்க் மாா்கண்டே, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கட், காா்திக் தியாகி, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், சேத்தன் சகாரியா, கே.சி.கரியப்பா, லியாம் லிவிங்ஸ்டன், குல்திப் யாதவ், ஆகாஷ் சிங்.

    பஞ்சாப் கிங்ஸ்:

    லோகேஷ் ராகுல் (கேப்டன்), மயங்க் அகா்வால், கிறிஸ் கெயில், மன்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங், நிகோலஸ் பூரன், சா்ஃப்ராஸ் கான், தீபக் ஹூடா, முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், ஹா்பிரீத் பிராா், முகமது ஷமி, அா்ஷ்தீப் சிங், இஷான் பொரெல், தா்ஷன் நல்கண்டே, கிறிஸ் ஜோா்டான், டேவிட் மலான், ஜை ரிச்சா்ட்சன், ஷாருக் கான், ரைலி மெரிடித், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜலஜ் சக்ஸேனா, உத்கா்ஷ் சிங், ஃபாபியான் ஆலன், சௌரப் குமாா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp