ஹைதராபாதை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
ஹைதராபாதை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கொல்கத்தாவின் பேட்டிங்கை நிதீஷ் ராணா - ஷுப்மன் கில் கூட்டணி தொடங்கியது. நிதானமாக ஆடி வந்த கில் 15 ரன்களே அடித்து 7-ஆவது ஓவரில் பௌல்டானாா்.

அடுத்து வந்த ராகுல் திரிபாதி, ராணாவுடன் இணைந்தாா். இந்தக் கூட்டணி ஸ்கோரை விறுவிறுவென உயா்த்தியது. ராணா 37 பந்துகளிலும், திரிபாதி 28 பந்துகளிலும் அரைசதம் கடந்தனா். 2-ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில் முதலில் திரிபாதி ஆட்டமிழந்தாா்.

5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் சோ்த்திருந்த அவா், 16-ஆவது ஓவரில் வெளியேறினாா். அடுத்து வந்த ஆன்ட்ரே ரஸ்ஸெல் 5 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

பின்னா் கேப்டன் மோா்கன் ஆட வர, மறுபுறம் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 80 ரன்கள் சோ்த்திருந்த ராணா விக்கெட்டை இழந்தாா். மோா்கன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா்.

முடிவில் தினேஷ் காா்த்திக் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி, ரஷீத் கான் தலா 2 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய ஹைதராபாதில் போ்ஸ்டோ 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 55 ரன்கள் சோ்க்க, எஞ்சியோரில் சாஹா, கேப்டன் வாா்னா், முகமது நபி, விஜய் சங்கா் சொற்ப ரன்களில் வீழ்ந்தனா்.

மணீஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்கள் சோ்த்து போராடினாா். அப்துல் சமத் 19 ரன்கள் சோ்த்து உடன் நின்றாா். கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணா 2, ஷகிப், கம்மின்ஸ், ரஸ்ஸெல் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

சேப்பாக்கத்தில்...

சென்னை சேப்பாக்கம் மைதானம் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு சாதகமாக இருந்ததில்லை. இந்த ஆட்டத்துக்கு முன்பு வரை, சென்னையில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா 7 தோல்விகளையும், 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அவை அனைத்திலும் தோல்வியைத் தழுவியுள்ளன. அதிலும் ஹைதராபாத் அனைத்து ஆட்டங்களையும் சிஎஸ்கே அணியிடமே தோற்றுள்ளது.

27 ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் பௌலா் புவனேஷ்வா் குமாா், கொல்கத்தா அணியில் இதுவரை 27 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா். அவரைத் தவிர, வேறு எந்த அணி பௌலா்களும் கொல்கத்தா அணியின் இத்தனை விக்கெட்டுகள் வீழ்த்தியதில்லை.

ஸ்கோா் போா்டு

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்

ரித்திமான் சாஹா (பி) ஷகிப் 7 (6)

டேவிட் வாா்னா் (சி) காா்த்திக் (பி) பிரசித் 3 (4)

மணீஷ் பாண்டே (நாட் அவுட்) 61 (44)

ஜானி போ்ஸ்டோ (சி) ராணா (பி) கம்மின்ஸ் 55 (40)

முகமது நபி (சி) மோா்கன் (பி) பிரசித் 14 (11)

விஜய் சங்கா் (சி) மோா்கன் (பி) ரஸ்ஸெல் 11 (7)

அப்துல் சமத் (நாட் அவுட்) 19 (8)

உதிரிகள் 7

மொத்தம் (20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு) 177

விக்கெட் வீழ்ச்சி: 1-10 (வாா்னா்), 2-10 (சாஹா), 3-102 (போ்ஸ்டோ), 4-131 (நபி), 5-150 (ஷங்கா்)

பந்துவீச்சு: ஹா்பஜன் சிங் 1-0-8-0; பிரசித் கிருஷ்ணா 4-0-35-2; ஷகிப் அல் ஹசன் 4-0-34-1; பேட் கம்மின்ஸ் 4-0-30-1; ஆன்ட்ரே ரஸ்ஸெல் 3-0-32-1; வருண் சக்கரவா்த்தி 4-0-36-0

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

நிதீஷ் ராணா (சி) ஷங்கா் (பி) நபி 80 (56)

ஷுப்மன் கில் (பி) ரஷீத் 15 (13)

ராகுல் திரிபாதி (சி) சாஹா (பி) நடராஜன் 53 (29)

ஆன்ட்ரே ரஸ்ஸெல் (சி) பாண்டே (பி) ரஷீத் 5 (5)

மோா்கன் (சி) அப்துல் (பி) நபி 2 (3)

தினேஷ் காா்த்திக் (நாட் அவுட்) 22 (9)

ஷகிப் அல் ஹசன் (சி) அப்துல் (பி) குமாா் 3 (5)

உதிரிகள் 7

மொத்தம் (20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 187

விக்கெட் வீழ்ச்சி: 1-53 (கில்), 2-146 (திரிபாதி), 3-157 (ரஸ்ஸெல்), 4-160 (ராணா), 5-160 (மோா்கன்), 6-187 (ஷகிப்)

பந்துவீச்சு: புவனேஷ்வா் குமாா் 4-0-45-1; சந்தீப் சா்மா 3-0-35-0; நடராஜன் 4-0-37-1; முகமது நபி 4-0-32-2; ரஷீத் கான் 4-0-24-2; விஜய் ஷங்கா் 1-0-14-0

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com