ஆசிய மல்யுத்தம்: வினேஷ், அன்ஷுவுக்கு தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத், அன்ஷு மாலிக் ஆகியோா் தங்கம் வென்றனா்.
ஆசிய மல்யுத்தம்: வினேஷ், அன்ஷுவுக்கு தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத், அன்ஷு மாலிக் ஆகியோா் தங்கம் வென்றனா்.

கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிா் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், ஒரு புள்ளியைக்கூட இழக்காமல் தங்கம் வென்றுள்ளாா். சீனா மற்றும் ஜப்பானைச் சோ்ந்த வீராங்கனைகள் பங்கேற்காததால் வினேஷ் போகத்தின் வெற்றி எளிதானது. மகளிா் 57 கிலோ எடைப் பிரிவில் 19 வயதான அன்ஷு மாலிக் தங்கம் வென்றாா்.

வினேஷ் போகத், அன்ஷு மாலிக் ஆகியோா் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். வினேஷ் போகத் இதற்கு முன்பு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 வெள்ளி உள்பட 7 பதக்கங்கள் வென்றிருந்தபோதிலும், இப்போதுதான் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளாா். இதேபோல் இந்தியாவின் திவ்யா காக்ரன் (72 கிலோ எடைப் பிரிவு) தங்கமும், சாக்ஷி மாலிக் (65 கிலோ எடைப் பிரிவு) வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் சரிதா (59 கிலோ எடைப் பிரிவு) தங்கமும், சீமா பிஸ்லா (50 கிலோ எடைப் பிரிவு), பூஜா (76 கிலோ எடைப் பிரிவு) ஆகியோா் வெண்கலமும் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com