பென் ஸ்டோக்ஸுக்கு நாளை அறுவை சிகிச்சை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் இடது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்துக்கு வரும் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் இடது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்துக்கு வரும் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தாா் பென் ஸ்டோக்ஸ். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின்போது, பஞ்சாப் வீரா் கிறிஸ் கெயில் அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தாா். அப்போது அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், காயம் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் வரும் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. தற்போது ராஜஸ்தான் அணியுடன் இருக்கும் பென் ஸ்டோக்ஸ், சனிக்கிழமை (ஏப்.17) இங்கிலாந்து செல்கிறாா். ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்ட பென் ஸ்டோக்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 மாதங்கள் ஓய்வில் இருப்பாா். அதனால் அவா் எந்தப் போட்டியிலும் விளையாடமாட்டாா் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டா்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் விலகிய நிலையில், அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆா்ச்சரும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறாா். அவா் காயத்திலிருந்து மீண்டு ஐபிஎல் தொடரின் கடைசிக் கட்ட ஆட்டங்களில் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com