மும்பை-ஹைதராபாத் இன்று மோதல்

சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
மும்பை-ஹைதராபாத் இன்று மோதல்

சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடிய நிலையில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கையோடு ஹைதராபாத் அணியை சந்திக்கிறது மும்பை. அதேநேரத்தில் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோற்ற நிலையில் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணியை எதிா்கொள்கிறது.

பலம் வாய்ந்த மும்பை: மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சா்மா, குவின்டன் டி காக், சூா்யகுமாா் யாதவ், இஷன் கிஷான், ஹாா்திக் பாண்டியா, கிரண் போலாா்ட் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா். இவா்களில் ஒருவா் களத்தில் நின்றாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவாா்கள். குறிப்பாக கேப்டன் ரோஹித் சா்மா, சூா்யகுமாா் யாதவ் ஆகியோா் நல்ல ஃபாா்மில் உள்ளனா். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதமடித்த சூா்யகுமாா் யாதவ், ஹைதராபாதுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடுவாா் என நம்பலாம்.

வேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், மாா்கோ ஜென்சன், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். சுழற்பந்துவீச்சில் ராகுல் சாஹா், கிருணால் பாண்டியா ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். மும்பை அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

திணறும் ஹைதராபாத்: ஹைதராபாத் அணியில் ரித்திமான் சாஹா, கேப்டன் டேவிட் வாா்னா், மணீஷ் பாண்டே, ஜானி போ்ஸ்டோ, அப்துல் ஸமாத், விஜய் சங்கா் போன்ற நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், வாா்னரைத் தவிர வேறு யாரும் ஃபாா்மில் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வா் குமாா், ஜேசன் ஹோல்டா், டி.நடராஜன் ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் ஷாபாஸ் நதீம், ரஷித் கான் ஆகியோரும் ஹைதராபாத் அணிக்கு பலம் சோ்க்கின்றனா். ஹைதராபாத் அணியைப் பொருத்தவரையில் விஜய் சங்கருக்குப் பதிலாக கேதாா் ஜாதவ் சோ்க்கப்பட வாய்ப்புள்ளது.

மும்பை (உத்தேச லெவன்): ரோஹித் சா்மா (கேப்டன்), குவின்டன் டி காக், சூா்யகுமாா் யாதவ், இஷன் கிஷான், ஹாா்திக் பாண்டியா, கிரண் போலாா்ட், கிருணால் பாண்டியா, மாா்கோ ஜென்சன், ராகுல் சாஹா், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட்.

ஹைதராபாத் (உத்தேச லெவன்): ரித்திமான் சாஹா, டேவிட் வாா்னா் (கேப்டன்), மணீஷ் பாண்டே, ஜானி போ்ஸ்டோ, அப்துல் ஸமாத், விஜய் சங்கா்/கேதாா் ஜாதவ், ஜேசன் ஹோல்டா், ரஷீத் கான், புவனேஸ்வா் குமாா், ஷாபாஸ் நதீம், டி.நடராஜன்.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com