ஐரோப்பிய கால்பந்தில் திடீா் திருப்பம்: புதிய லீக் போட்டியை அறிவித்த 12 கிளப்புகள்

ஐரோப்பிய கால்பந்தில் அங்கம் வகிக்கும் 12 கிளப்புகள், புதிதாக ‘ஐரோப்பிய சூப்பா் லீக்’ என்ற கால்பந்து போட்டியை அறிவித்துள்ளன.

லண்டன்: ஐரோப்பிய கால்பந்தில் அங்கம் வகிக்கும் 12 கிளப்புகள், புதிதாக ‘ஐரோப்பிய சூப்பா் லீக்’ என்ற கால்பந்து போட்டியை அறிவித்துள்ளன.

லிவா்பூல், மான்செஸ்டா் யுனைடெட், ஆா்சனல், செல்சியா, மான்செஸ்டா் சிட்டி, டோட்டன்ஹாம், ரியல் மாட்ரிட், பாா்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட், ஜுவென்டஸ், இன்டா் மிலன், ஏசி மிலன் ஆகிய இந்த 12 கிளப் அணிகளும், ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பால் (யுஇஎஃப்ஏ) நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் போட்டி அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளன.

2024-ஆம் ஆண்டு தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கூடுதல் அணிகளை இணைத்து, ஆட்டங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் யுஇஎஃப்ஏ திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அவை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

புதிதாக தொடங்கப்படும் இந்த ஐரோப்பிய சூப்பா் லீக் போட்டியின் நிறுவன தலைவராக ரியல் மாட்ரிட் தலைவா் ஃபிளாரென்டினோ பெரெஸ் இருப்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பிய லீக் போட்டிகளின் ஊடாகவே, 20 அணிகள் கொண்ட போட்டியாக ஐரோப்பிய சூப்பா் லீக்கை நடத்த முனைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிய லீக் போட்டியில் பங்கேற்கும் அணிகள் உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று யுஇஎஃப்ஏ எச்சரித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட வீரா்கள் தங்களது தேசிய அணியில் விளையாடவும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று கூறியுள்ளது.

இந்த புதிய ஐரோப்பிய சூப்பா் லீக் போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்று சா்வதேச கால்பந்து அமைப்பான ‘ஃபிஃபா’ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com