வெற்றியைத் தொடங்குமா ஹைதராபாத்?:பஞ்சாபுடன் இன்று மோதல்

நடப்பு சீசனில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத ஒரே அணியாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணியை புதன்கிழமை சந்திக்கிறது. 
வெற்றியைத் தொடங்குமா ஹைதராபாத்?:பஞ்சாபுடன் இன்று மோதல்

சென்னை: நடப்பு சீசனில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத ஒரே அணியாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணியை புதன்கிழமை சந்திக்கிறது. 
ஹாட்ரிக் தோல்வியுடன் இருக்கும் ஹைதராபாத் அனைத்து ஆட்டங்களிலும் சேஸிங்கிலேயே தோற்றுள்ளது. அதிலும் மும்பைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் மிகக் குறைந்த ஸ்கோரைக் கூட எட்ட முடியாமல் வீழ்ந்தது, அந்த அணியின் பேட்டிங்கில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை வெளிக்காட்டுகிறது. 
எனவே இந்த ஆட்டத்துக்கு முன்பாக பிளேயிங் லெவனில் தகுந்த முடிவெடுக்க வேண்டிய நிலையில் கேப்டன் வார்னர் இருக்கிறார். 
காயத்திலிருந்து மீண்டு வரும் கேன் வில்லியம்சன் இல்லாததன் பாதிப்பை ஹைதராபாத் நன்றாக உணர்கிறது. மிடில் ஆர்டரில் வலுனான வரிசை இல்லாத நிலையே காணப்படுகிறது. 
அணியின் இந்திய வீரர்களில் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கும் வகையில் எவரும் இல்லை. சாஹா தனது ஃபார்மை எட்டாத நிலையில், மணீஷ் பாண்டே மட்டும் சற்று முயற்சிக்கிறார். விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், கேதார் ஜாதவ், பிரியம் கர்க் உள்ளிட்டோர் தங்களது திறமையை நிரூபிக்க இதுவே தருணம். 
பெüலிங்கில் புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். ரஷீத் கான் மட்டும் சற்று சோபிக்கிறார். 
மறுபுறம், பஞ்சாப் அணி கடைசி இரு ஆட்டங்களில் தோற்றுள்ளதால், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முயற்சியாக இந்த ஆட்டத்தில் களம் காணும். சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பிய அந்த அணியின் பேட்டிங், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலால் மீண்டது. எனினும், அந்த அணியின் பெüலர்கள் சொதப்பியதால் வெற்றி பறிபோனது. 
பெüலிங்கில் அர்ஷ்தீப் மட்டும் சற்று அபாரம் காட்டுகிறார். மூத்த வீரர் முகமது ஷமி வழக்கமான ஃபார்மில் இல்லை. ரிச்சர்ட்சன், மெரிடித் ஆகியோரும் ரன்கள் கொடுக்கின்றனர். எனவே கிறிஸ் ஜோர்டானுக்கு வாய்ப்பு வழங்க ராகுல் யோசிக்கலாம். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர் (கேப்டன்), 
கேன் வில்லியம்சன், விராட் சிங், 
மணீஷ் பாண்டே, பிரியம் கர்க், 
ரித்திமான் சாஹா, ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, 
விஜய் சங்கர், முகமது நபி, 
கேதார் ஜாதவ், ஜெகதீசா சுசித், 
ஜேசன் ஹோல்டர், 
அபிஷேக் சர்மா, அப்துல் சமத், 
புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், 
டி.நடராஜன், சந்தீப் சர்மா, கலீல் அகமது, 
சித்தார்த் கெüல், பாசில் தாம்பி, 
ஷாபாஸ் நதீம், முஜீப் உர் ரஹ்மான்.


பஞ்சாப் கிங்ஸ்

லோகேஷ் ராகுல் (கேப்டன்), 
மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், 
மன்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங், 
நிகோலஸ் பூரன், சர்ஃப்ராஸ் கான், 
தீபக் ஹூடா, முருகன் அஸ்வின், 
ரவி பிஷ்னோய், ஹர்பிரீத் பிரார், 
முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், 
இஷான் பொரெல், தர்ஷன் நல்கண்டே, கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான், 
ஜை ரிச்சர்ட்சன், ஷாருக் கான், 
ரைலி மெரிடித், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜலஜ் சக்úஸனா, உத்கர்ஷ் சிங், 
ஃபாபியான் ஆலன், செüரப் குமார்.

நேருக்கு நேர்

ஹைதராபாத்-பஞ்சாப் அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ஹைதராபாத் 11 முறையும், 
பஞ்சாப் 5 முறையும் வென்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com