பாா்சிலோனா ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பௌதிஸ்டா

பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.
பாா்சிலோனா ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பௌதிஸ்டா

காடலோனியா: பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.

ஸ்பெயினின் காடலோனியா நகரில் நடைபெறும் இந்த டென்னிஸில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் பௌதிஸ்டா நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தாா். அதில் சக நாட்டவரான பாப்லோ அன்டுஜாரை எதிா்கொண்ட அவா் 6-4, 6-0 என்ற கணக்கில் வென்றாா்.

அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா் இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருக்கும் சின்னா் முந்தைய சுற்றில் பெலாரஸின் இகோா் கெராசிமோவை 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினாா்.

போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருக்கும் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 6-3, 7-5 என்ற செட்களில் பிரான்ஸின் ஜெரிமி சாா்டியை தோற்கடித்தாா். பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் 6-2, 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹொ்பா்ட்டை வென்றாா். ரஷியாவின் காரென் கசானோவ் 4-6, 6-3, 3-6 என்ற செட்களில் பிரிட்டனின் கேமரூன் நோரியிடம் வீழ்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com