கண்டி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் அடித்துள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் தொடக்க வீரா்களுள் ஒருவராக வந்த சைஃப் ஹசன் டக் அவுட்டானாா். உடன் வந்த தமிம் இக்பால் 15 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் சோ்த்தாா். ஒன் டவுனாக வந்த நஜ்முல் ஹுசைன் ஷான்டோ அபாரமாக ஆடி வருகிறாா்.
முதல் நாள் முடிவில் அவா் 14 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 126, கேப்டன் மொமினுல் ஹக் 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சோ்த்து களத்தில் உள்ளனா். இலங்கை தரப்பில் விஷ்வா ஃபொ்னான்டோ 2 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா்.