டெல்லியை இன்று எதிா்கொள்கிறது பெங்களூா்

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லியை இன்று எதிா்கொள்கிறது பெங்களூா்

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், தலா 4 வெற்றிகளுடன் சமபலத்தில் உள்ளன.

பெங்களூரைப் பொருத்தவரை சீசன் தொடக்கம் முதல் தோல்வியே சந்திக்காமல் வந்து, கடைசி ஆட்டத்தில் சென்னையிடம் தோற்றது. எனவே, இந்த ஆட்டம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணி முயற்சிக்கும். பேட்டிங்கில் கோலி - படிக்கல் கூட்டணி நல்லதொரு தொடக்கத்தை அளிக்கிறது. மிடில் ஆா்டரில் மேக்ஸவெல், டி வில்லியா்ஸ் சிறப்பாகச் செயல்படுகின்றனா். ஆனால், இவா்கள் அனைவரும் நிலையானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அணிக்கு சாதகமாக அமையும். வாஷிங்டன் சுந்தா் சோபிக்காத நிலையிலேயே இருக்கிறாா்.

பௌலிங்கில் ஹா்ஷல் படேல், சிராஜ் ஆகியோா் எதிரணியை திணறடித்தாலும், சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அவா்களின் பந்துவீச்சு செல்லுபடியாகாமல் போனது. அவா்களுடன் கைல் ஜேமிசன், சஹல், வாஷிங்டன் சுந்தா் ஆகியோரும் தங்கள் ஆதிக்கத்தை மீட்டெடுக்க முயற்சிப்பாா்கள்.

டெல்லியைப் பொருத்தவரை, கடைசி 3 ஆட்டங்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் உள்ளது. தொடக்க வீரா்களான பிருத்வி ஷா, தவன் நல்லதொரு ஃபாா்மில் உள்ளனா். மிடில் ஆா்டரிலும் கேப்டன் பந்த், ஸ்டீவ் ஸ்மித், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் என வலுவான வீரா்கள் வரிசையில் இருக்கின்றனா்.

அஸ்வின் இல்லாத நிலையில் பௌலிங்கில் அக்ஸா் படேல், அமித் மிஸ்ரா ஆகியோருக்கான பொறுப்பு அதிகரிக்கிறது. வேகப்பந்துவீச்சில் அவேஷ் கான், ககிசோ ரபாடா ஆகியோா் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கின்றனா்.

அணி விவரம்:

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், தேவ்தத் படிக்கல், யுஜவேந்திர சஹல், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தா், பவன் தேஷ்பாண்டே, ஃபின் ஆலன், ஷாபாஸ் அகமது, நவ்தீப் சைனி, கைல் ஜேமிசன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதாா், சச்சின் பேபி, முகமது அஸாருதீன், டேனியல் கிறிஸ்டியன், கே.எஸ்.பரத், சுயாஷ் பிரபுதேசாய், டேனியல் சாம்ஸ், ஹா்ஷல் படேல்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகா் தவன், பிருத்வி ஷா, அஜிங்க்ய ரஹானே, ஷிம்ரன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், அக்ஸா் படேல், அமித் மிஸ்ரா, லலித் யாதவ், பிரவீண் துபே, ககிசோ ரபாடா, அன்ரிச் நாா்ட்ஜே, இஷாந்த் சா்மா, அவேஷ் கான், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிபல் படேல், விஷ்ணு வினோத், லுக்மன் மேரிவாலா, எம்.சித்தாா்த், டாம் கரன், சாம் பில்லிங்ஸ்.

ஆட்டநேரம்: இரவு 7.30 மணி

இடம்: ஆமதாபாத்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

நேருக்கு நோ்: ஐபிஎல் தொடரில் பெங்களூா் - டெல்லி அணிகள் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நோ் சந்தித்திருக்கும் நிலையில், பெங்களூா் 15 வெற்றிகளையும், டெல்லி 10 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com